லிங்குசாமி இயக்கும் ‘தி வாரியர்’ தெலுங்குப்படத்தின் ‘பஸ்ட் லுக்’ வெளியீடு
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகி வரும் ‘தி வாரியர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் ராம் பொத்தினேனி முதன்முறையாக பிரபல இயக்குனர் லிங்குசாமியுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் ஆதி, குரு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிக கவனம் பெற்றுள்ளது.
.இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்ஷன் கமர்ஷியல் படங்களுக்காக புகழ் பெற்றவர். ராம் பொத்தினேனி, ஆதி இருவரும் திரைப்படங்களில் தங்கள் சிறந்த நடிப்பை கொடுப்பதில் வல்லவர்கள். கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் (படத்தில் அவர் பெயர் விசில் மகாலட்சுமி), அக்ஷரா கவுடா ஒரு முக்கிய பாத்திரத்திலும் தங்கள் பங்குக்கு ரசிகர்களை கவர இருக்கிறார்கள்.
Srinivasaa Silver Screen ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை தேவிஸ்ரீ பிரசாத். பவன்குமார் படத்தை வழங்குகிறார்.