சினி நிகழ்வுகள்

அஜித் பட தியேட்டர்களில் ‘பவுடர்’ வாசனை

நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 திரைப்படத்தை இயக்கியவரும், நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள பப்ஜி படத்தின் இயக்குநரும், வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ‘ஹரா’ படத்தை விரைவில் தொடங்கவிருப்பவருமான விஜய் ஸ்ரீ ஜி, வித்யா பிரதீப், தற்போது நிகில் முருகன், வித்யா பிரதீப் நடிப்பில் ‘பவுடர்’ படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த 26 வருடங்களாக தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன், பவுடர் படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பலரது பாராட்டை பெற்றிருந்த நிலையில், சிறப்பு காணொலி (கிளிம்ப்ஸ்) இன்று வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள வலிமை படத்தை திரையிடும் அரங்குகளில் பவுடர் கிளிம்ப்ஸ் திரையிடப்பட்டது. கண்டிப்பான போலீஸ் அதிகாரி ராகவன் என்.எம். ஆக நிகில் முருகன் இதில் தோன்றியுள்ளார்.

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி மக்களின் வெறுப்பை சம்பாதித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை தனக்கே உரிய பாணியில் ராகவன் கையாள்வதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது.

திரைப்பட பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பவுடர் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அனித்ரா நாயர், சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

பவுடர் குழு

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி

இசை (கிளிம்ப்ஸ்) – லேயண்டர் லீ மார்ட்

ஒளிப்பதிவு – பிரஹத் முனியசாமி (கிளிம்ப்ஸ்) உதவி ஒளிப்பதிவாளர்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

படத்தொகுப்பு – குணா

கலை இயக்குநர் – சரவணா

சண்டைக்காட்சி – விஜய்

உடைகள் – வேலவன்

புகைப்படங்கள் – ராஜா

சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்

ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்

டிஐ வண்ணம்: வீரராகவன்

வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்

தயாரிப்பு மேலாளர் – சரவணன்

தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா

தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்

ஆடியோ லேபிள் – டிவோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *