திரை விமர்சனம்

அன் சார்டட் திரை விமர்சனம்

சோனியின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்’ அதே பெயரில், அதே கேரக்டர்களுடன் திரைக்கு வந்து ரசிகர்களின் கொண்டாட்டமாகி இருக்கிறது.

500 ஆண்டுகளுக்கு மேலாக மான்காடா மாளிகையின் புதையலை மீட்டெடுக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு உயிரை விடுகிறார்களே தவிர, புதையலை யாராலும் எடுக்க முடியவில்லை. அதே சமயம், புதையலுக்கான வாரிசுகளாக நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, அந்த புதையலை கைப்பற்றி தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க சுல்லி, நேட், மற்றும் க்ளோயி கூட்டணியும் திட்டமிட, பல மர்மங்கள் நிறைந்த அந்த புதையலை இரு தரப்பில் யார் கைப்பற்றினார்கள், அதன் பின்னணியில் இருக்கும் ஆபத்துகளும், சவால்களும் என்ன? என்பதே படத்தின் கதை.
நேட் கதாப்பாத்திரத்தில் டாம் ஹாலண்ட் தனக்கான ஸ்டைல் நடிப்பில் தன் இருப்பை நிரூபிக்கிறார்.
சுல்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் வால்பெர்க் தனது நடிப்பு மூலம் தனது கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறார்.

மிகப்பெரிய அட்வெஞ்சர் பயணமாக இருந்தாலும், அவ்வப்போது டாம் ஹாலண்ட் மற்றும் வால்பெர்க் ஆகியோர் செய்யும் காமெடி ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கிறது.

க்ளோயி கேரக்டரில் வரும் சோபியா அலி, அதிரடி சண்டைக்காட்சிகள் மூலம் தனது கேரக்டரை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்.

ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே ஆகியோர் எழுதிய திரைக்கதைக்கு, காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் ஃப்ளீஷர். விமான சண்டைக்காட்சிகள் உச்சக் கட்ட திரில் என்றால், படத்தின் பிரமாண்டம் அடுத்த கட்ட மிரட்டல்.

சாகசப் பயணம்.