சினி நிகழ்வுகள்

அட, அசத்தல் சமந்தா சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘சாகுந்தலம்’

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘சாகுந்தலம்’ திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.
தற்போது படக்குழு சாகுந்தலம் படத்தில் சமந்தாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் சமந்தா நேர்த்தியான தோற்றத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளால் சூழப்பட்ட காட்டில் அமர்ந்திருக்கிறார். சமந்தா எங்கோ ஆர்வமாகப் பார்க்கிறார், காட்டில் அவருடன் இருக்கும் தோழமைகள் அவரை பிரமிப்புடன் பார்க்கிறார்கள். இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது.
சாகுந்தலம் திரைப்படத்தை இயக்குநர் குணசேகர் எழுதி இயக்குகிறார், மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்க,
சேகர் V ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா அறிமுகம் ஆகும் இப்படத்தில், மோகன்பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Gunaa DRP – Teamworks சார்பில் நீலிமா குணா, மிகப்பெரும் பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு, சாகுந்தலம் படத்தை வழங்குகிறார்.