சினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்

வீரபாண்டியபுரம் பட விமர்சனம்

இரு கிராமங்களுக்கிடையே பிரச்சினை. அதில் ஒரு கிராமத்திற்கு ஜெயபிரகாஷ் தலைவர். மற்றொரு கிராமத்திற்கு சரத் தலைவர்.
இந்நிலையில், ஒரு கிராமத்தின் தலைவரான சரத் மகளை ஜெய் காதலிக்கிறார். சரத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள காதல்ஜோடி முடிவு செய்கிறது. ஆனால், கடைசி நிமிடத்தில் மனம் மாறும் ஜெய், நாயகி தந்தையின் சம்மதத்தோடு தான் நம் திருமணம் என்று கூறி, இருவரும் நாயகியின் தந்தை சரத்திடம் வருகிறார்கள்.
முதலில் இருவரையும் ஆதரிக்கும் சரத், பின்னர் ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
சரத் மற்றும் அவரது தம்பிகள் மூவரையும் கொலை செய்யவே அந்த வீட்டிற்குள் மாப்பிள்ளையாக நுழைந்திருக்கிறார் ஜெய் என்பது அதன்பிறகே தெரிய வருகிறது.
ஜெய் எதற்காக சரத் மற்றும் அவரது தம்பிகளை கொலை செய்ய நினைக்க வேண்டும்? ஜெய் யார்.? இரு கிராமத்திற்குள்ளும் என்ன பிரச்சினை.? என்பது மீதிக் கதை.
நாயகன் ஜெய், சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு மிரட்டலான நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார். படபடப்பு, கோபம், ஆத்திரம் என பல கோணங்களில் நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடித்திருக்கிறார்.
‘கென்னடி கிளப்’ படத்தின் அறிமுக நாயகி நாயகி மீனாட்சியிடம். இந்த படத்தில் நடிப்பில் நல்ல முன்னேற்றம். நல்ல கேரக்டர் அமைந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு.
மற்றொரு நாயகியாக அகன்ஷா சிங், கேரக்டரோடு ஒன்றி ரசிக்க வைக்கிறார்.
சரத், ஜெயபிரகாஷ், ஹரீஷ் உத்தமன், அர்ஜெய், முத்துக்குமார் மிரட்டலான வில்லன்கள். நடிகர்களில் காளி வெங்கட் நடிப்பில் பல படி முன்னேற்றம் தெரிகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் பால சரவணன் சிரிக்க வைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றிப் போகிறார்.
முதல் முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி அசத்தியிருக்கிறார் ஜெய். பாடல்கள் ரசனை பிளஸ் ரகளை. குறிப்பாக வைரமுத்து வரிகளில் ‘காட முட்ட’ பாடல் ‘அட்ரா சக்கை’ ரகம்.
வேல்ராஜ் ஒளிப்பதிவில் அந்த கிராமம் அத்தனை அழகு..
குடும்ப கதைகளில் முத்திரை பதித்த சுசீந்திரன், இந்த படத்தில் அடிதடி, குரோதம் வன்முறை, பழி தீர்த்தல் என்று புதிய பாதை போட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *