விமல் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான விலங்கு இணைய தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்த போது நாயகன் விமல் பேசியது தான் ஹைலைட்.

‘‘பல வருடம் கழித்து மைக் முன்னாடி நிற்கிறேன். முதலில் இது படமாகத் தான் உருவாகி இருந்தது. ஆனால், படத்தின் கன்டென்ட் அதிகமாக அதிகமாக படத்தின் கதையை 2.30 மணி நேரத்திற்குள் சொல்ல முடியவில்லை. அதனால் தான் வெப்சீரிஸ் பண்ணோம்.

உண்மையில் விலங்கு படம் நன்றாக இருக்கு. நானும் சினிமாவுக்கு வந்து 12 வருடம் ஆகிவிட்டது. ஒரு வெப்சீரிஸ் பண்ணணும் என்றும், அதன் அனுபவம் எப்படி இருக்குன்னு பார்க்கணும் என்ற ஆசை தற்போது நடந்திருக்கு. அதுவும் ரொம்ப நல்லா வந்திருக்கு. காதல் சட்டையிலிருந்து காக்கி சட்டைக்கு மாறிய புது விமலை நீங்கள் இந்த விலங்கு வெப் சீரிசில் பார்க்கலாம்.

எனக்கு மூணு வருஷமாக படம் இல்லை. வீட்டில் தான் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தேன். இந்த சீரிசை தயாரித்த மதன் ஜேம்ஸ் தயாரிப்புத்துறையில் கொடிகட்டி பறந்தவர். அவரும் மூணு வருஷம் ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருந்தார். ஒரு படத்தை எடுத்து பிளாப் கொடுத்த பிரசாந்த் பாண்டியராஜ் தான் இந்த படத்தின் இயக்குனர். இந்த மூன்று பேரையும் நம்பி ஜி5 இந்த வேலையை கொடுத்ததற்கு பாராட்ட வேண்டும். ஆனால், எங்கள் மூவரையும் தோல்வியுற்றவர்களுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த மூன்று நபர்களாகவே நான் பார்க்கிறேன். தோல்விகளில் மட்டுமே அனுபவத்தை பெற முடியும்’’ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/652d08de-0387-4c8c-bf63-2eac1dbfc587-819x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/652d08de-0387-4c8c-bf63-2eac1dbfc587-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்விமல் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான விலங்கு இணைய தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்த படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்த போது நாயகன் விமல் பேசியது தான் ஹைலைட். ‘‘பல வருடம் கழித்து மைக் முன்னாடி நிற்கிறேன். முதலில் இது படமாகத் தான் உருவாகி இருந்தது. ஆனால், படத்தின் கன்டென்ட் அதிகமாக அதிகமாக படத்தின் கதையை 2.30 மணி...