இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான், அபூபக்கர் அப்துல்லா. இந்தியாவிலும் பயங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடும் அவனை
இந்திய உளவுத்துறை வலைவீசித் தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார். அவர் தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது.
உண்மையை நிரூபித்து விஷ்ணு விஷால் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா? என்பது அதிரிபுதிரி திரைக்கதை.
ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய படம். நடிப்பிலும் அதிக மெருகேறல் தெரிகிறது. ஆக்ஷன், எமோஷன், காதல் தோல்வி, அம்மா பாசம் என அனைத்திலுமே ஸ்கோர் செய்து அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக தன் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படும்போது ஏற்படும் ஆவேசத்தில் எரிமலையின் சீற்றம் எட்டிப்பார்க்கிறது, நடிப்பில்.
ரைசா வில்சன் திரை வாழ்வில் முக்கியமான படம் இது. அதிரடியான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
மஞ்சிமா மோகன், ரேபா மோனிகா தங்கள் கேரக்டர்களில் நிற்கிறார்கள். கவுதம் மேனன் தனது வித்தியாச நடிப்பில் மனதில் நிறைகிறார்.

இசை, ஒளிப்பதிவு இரண்டுமே இந்த துப்பறியும் அதிரடி கதைக்கு கூடுதல் பலம்.
விறுவிறுப்பான திரைக்கதையை நேர்கோட்டில் அழகாக எடுத்துச் செல்லும் எடிட்டிங், படத்தின் வேகம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
கவுதம்மேனன் உதவியாளராக இருந்து இந்த படத்தின் இயக்குனராக புரமோஷனாகி இருக்கும் மனு ஆனந்த், முதல் படத்திலேயே குருவுக்கு தப்பாத சிஷ்யனாக பிரகாசிக்கிறார். தெளிந்த நீரோடை போல கதை சொல்லும் ஆற்றல் இவருக்கான திரை அடையாளமாகி இருக்கிறது, அதுவும் முதல் படத்திலேயே. சிக்கலான கதைக்கருவை எடுத்துக் கொண்டு அதை கையாண்ட விதத்தில் சபாஷ் பெறுகிறார்.

டெய்ல் பீஸ்: விஷ்ணு விஷால்…இனி நீ நடிப்பு ராட்சசனும் கூட.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/0f2927ac-0069-407a-8e29-fb78d204f048-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/02/0f2927ac-0069-407a-8e29-fb78d204f048-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்இலங்கை தலைநகர் கொழும்புவில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமானோர் மரணத்துக்கு காரணமாகிறான், அபூபக்கர் அப்துல்லா. இந்தியாவிலும் பயங்கரவாத செயல்களைச் செய்ய திட்டமிடும் அவனை இந்திய உளவுத்துறை வலைவீசித் தேடி வருகிறது. அந்தத் தேடலில் எதிர்பாராமல், அப்பாவி இஸ்லாமியரான விஷ்ணு விஷால் சிக்குகிறார். அவர் தான் பயங்கரவாதி அபூபக்கர் அப்துல்லா என உளவுத்துறை நினைக்கிறது. உண்மையை நிரூபித்து விஷ்ணு விஷால் மீண்டாரா, பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதா? என்பது அதிரிபுதிரி திரைக்கதை. ராட்சசன்...