சினிமா செய்திகள்

40 நிமிடத்தில் கதை சொல்லி தயாரிப்பாளரை அசத்திய இயக்குனர்

எம்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில் உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் ‘கூர்மன்.’. மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்தை முதன்மை பாத்திரமாக கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மாறுபட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாவதையொட்டி படத்தின் இசை விழா சென்னையில் நடந்தது. படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட, நடிகை ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்
விழாவில் நடிகர் பாலசரவணன் பேசியது…
இந்தப்படத்தில் முதல்முறையாக கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன், எங்களுடன் ஒரு நாயும் நடித்தது. அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் முருகானந்தம் பேசியது…
கூர்மன் படத்தில் சின்ன கேரக்டர் தான். என்றாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனாலும் நடித்தேன். மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஆனால் தயாரிப்பாளருக்கு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.
நடிகர் ஆடுகளம் நரேன் பேசியது.
கூர்மன் பிஜுவை எனக்கு நன்றாக தெரியும். ஒரு சிறு காட்சிக்கு பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். எனக்கு புரிய கஷ்டமாக இருந்தது. போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாசமாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷூவலாக நடித்தார்கள். இது நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும்.
எடிட்டர் தேவராஜ் பேசியது..
படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜுவுஜ்கு நன்றி. பிஜுவும் நானும் 12 வருட நண்பர். மற்ற படத்திற்கும் இப்படத்திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே வைத்திருந்தார். படம் நன்றாக வந்துள்ளது
நடிகர் பிரவீன் பேசியது….
டிரிப் படத்திற்கு பிறகு எனக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. எனது படத்தில் நீ இருப்பாய் என்று மதன் எப்போதோ சொல்லியிருந்தார். படம் செய்யும் போது என்னை கூப்பிட்டு சொன்னது சொன்னபடி வாய்ப்பு தந்தார். இதில் இரண்டாவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம். கேட்டபோதே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன், என்னுடன் நடித்த அனைவரும் அருமையாக நடித்தார்கள். ராஜாஜி, பாலசரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள். அவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
சூப்பர் குட் சுப்பிரமணி பேசியது…
சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம், அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் விருது பெறும், அந்தப்படத்தில் எனக்கு ஒரு நடிகராக நல்ல அடையாளம் கிடைத்தது அந்தப்படம் போல் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும்.
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் சதீஷ் பேசியது…
என்னுடன் பயணித்த என் குழுவிற்கும், அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை அனைவரும் கடுமையாக உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள், இந்தப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வந்து விடுவோம் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.
பாடலாசிரியர் உமாதேவி பேசியது…
படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். இசையமைப்பாளர் பிரிட்டோ, சந்தோஷ் நாரயணன் மூலம் எனக்கு அறிமுகமானவர், அவரது இசை வித்தியாசமாக இருந்தது. கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ஆம்பல் பூ எனும் பாடல் திவாகர் வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார். நாசூக்காக வேலை வாங்குவதில் இந்தக்குழு கில்லாடி, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, பாடலை கவிதையாய் வேண்டுமென எழுதி வாங்கினார்கள். பாடலும் படமும் நன்றாக வந்துள்ளது. இந்தப் பாடல்களுக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்வீர்கள் என நம்புகிறேன்.
இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியது…
தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக்கிறார் என்பதே தெரியாது, அவர் உதவியாளர்களிடம் கேட்டால் தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்கு பிடித்திருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்கள் உமாதேவி எழுத, இன்னொரு பாடலை பிஜுவே எழுதி விட்டார். பாடலை கேட்டு, கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி.
நடிகர் ராஜாஜி பேசியது…
நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்துகொள்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் ‘ தான் மட்டும் நல்லாருக்கணும்’னு நினைப்பவர் அல்ல. தன்னை சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ இந்தக்கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். பிஜு படத்தை அருமையாக எடுத்துள்ளார். இ
இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் பேசியது….
எல்லோரும் இப்படத்தில் அவரவர் வேலையை ஈஸியாக செய்து தந்தார்கள், அதனால் தான் இந்தப் படம் நடந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஒரு தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இந்தப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். சினிமாவில் அது அவ்வளவு எளிதாக நடக்காது. அதற்காக மதன் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை சிக்கல் இல்லாமல் உருவாக்க காரணமாக இருந்த சுரேஷ் சாருக்கு நன்றி. இது ஒரு நல்ல படம். ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை ஜனனி ஐயர் பேசியது…
பிரையன் B. ஜார்ஜை தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்து விட்டார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும், இந்த படத்தை எடுக்கும்போது படத்தில் ஒரு மேஜிக் நடந்தது. ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம் அதனால் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம், ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும்.
படத்தின்தொழில்நுட்ப குழு விபரம்
எழுத்து இயக்கம் பிரையன் B. ஜார்ஜ்ஒளிப்பதிவு – சக்தி அர்விந்த்

இசை – டோனி பிரிட்டோ

எடிட்டிங் – S. தேவராஜ்

கலை – கருணாநிதி

ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன்

ஸ்டண்ட் – ஸ்டன்னர் ஷாம்

உடை வடிவமைப்பு – டினா ரோஸாரியோ

விஷுவல் எபெஃக்ட்ஸ் – R.ஜீவரத்தினம்

புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – D.நரசிம்மன்

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – S.கணேஷ், சதீஷ்பாபு

மேக்கப் – U.K.சசி.

ஸ்டில்ஸ் – ஜீகே.

பத்திரிகைத் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்

இணை தயாரிப்பு – சுரேஷ் மாரிமுத்து

தயாரிப்பு – MK.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *