‘தங்கையே உயிர்’ என்று எண்ணும் அண்ணன். ‘அண்ணனே சகலமும்’ என்று கொண்டாடும் தங்கை. இப்படி அண்ணனின் உயிரான அந்த தங்கை தனது திருமண விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்போக… நொறுங்கிப் போகிறான் அந்த பாசக்கார அண்ணன்.

இருந்தாலும் பாசம் விடுமா? கொல்கத்தாவில் கணவனுடன் இருக்கும் தங்கையை அவளுக்கே தெரியாமல் பார்த்து வர இந்த பாசமலர் அண்ணன் கொல்கத்தா பயணப்பட… அங்கே தங்கை இருக்கும் நிலை அதிரவைக்கிறது. அவள் கணவனின் தொழிற்சாலையை மிரட்டி தனதாக்கிக் கொள்ளும் சர்வசக்தி படைத்த தாதா, கணவனையும் தனது செல்வாக்கால் சிறையில் தள்ளுகிறான். தங்கை இப்போது தனியாளாக,, வறுமைக் கோட்டின் பிடியில்.

இது தெரிய வந்த அண்ணன் தங்கைக்காக எடுக்கும் ஆக்–ஷன் அவதாரமே ‘அண்ணாத்த.’

படத்தில் பாசமிகு அண்ணனாக, துடிப்பான பஞ்சாயத்து தலைவராக, ஊர் மக்களின் அன்புக்குரியவராக என நடிப்பில் அசரடிக்கிறார், ரஜினி. போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ்ராஜை கலாய்க்கும் இடத்தில் தியேட்டரையே கலகலப்பாக்குகிறார். முதல் சந்திப்பிலேயே வக்கீல் நயன்தாராவை பார்வையால் வளைத்துப் போடும் இடத்திலும் உயிர்ப்பான காதல், கொல்கத்தாவில் அதிரடி துவம்சம் என தொட்ட குறை விட்ட குறை இல்லாமல் எங்கும் ரஜினி எதிலும் ரஜினி. படம் முழுக்க தனது நடிப்பு சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திக் கொண்டு விடுகிறார்.

அண்ணன்-தங்கை பாசக்கதை என்பதால் காதலி நயன்தாரா உள்ளிட்ட பலரையும் ஒரம் ஓதுக்கி விடுகிறது திரைக்கதை. இதில் தப்பிப் பிழைப்பவர் தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் மட்டுமே. அவரும் நடிப்பில் இ்ந்த அண்ணனின் பாசத்தங்கை என்பதை நிரூபிக்கிறார்.

ரஜினியின் முன்னாள் ஜோடிகளான மீனா, குஷ்பு படத்தில் செய்வது அபத்தக் காமெடி. ரஜினியை மீண்டும் அடைய தங்கள் கணவர்களை போட்டுத் தள்ளி விடுவோம் என்பதாக அவர்கள் வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் காமெடிக்காகவே இருந்தாலும், அது கலாசார சீர்கேடு.

சூரி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். திருந்தும் வில்லனாக பிரகாஷ்ராஜ் கவனம் பதிக்கிறார். திருந்தாத கொல்கத்தா தாதாக்கள் அபிமன்யு சிங், ஜெகபதிபாபு கதையில் ‘செத்து’ நடிப்பில் ‘பிழைக்கிறார்கள்.’

இமானி இசையில் ‘சார சாரக்காற்றே’ நெஞ்சுக்குள் குளிர் சாரல்.

கண்ணாமூச்சி ஆட்டமும் வில்ல கூட்டமுமாய் இரண்டாம் பாதி நைல் நதியாய் நீண்டு கொண்டிருக்க… மயங்கிக் கிடக்கும் அடியாட்களை எழுப்பி செல்போனிலுள்ள தன் அண்ணன் படத்தை காட்டும் தங்க மீனாட்சி ‘யாருங்க உங்கள அடிச்சது? இவரா? ‘ என எமோஷனலாய் கேட்கும்பொழுது தியேட்டரில் சிரிப்பலை.

இயக்கிய சிவா, ஏற்கனவே தான் இயக்கிய படங்களில் இருந்தே கதையை எடுத்து தூசு தட்டியிருந்தாலும் நடித்தவர் ரஜினி என்பதால் தப்பிப் பிழைக்கிறது, படம். தங்கை எந்த வெளிமாநிலத்தில் படித்தாள்? உயிரான அண்ணனிடம் தன் காதலை சொல்ல என்ன தயக்கம் என்பதெல்லாம் சிவாவுக்கே வெளிச்சம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/maxresdefault-15-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/maxresdefault-15-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்நடிகர்கள்‘தங்கையே உயிர்’ என்று எண்ணும் அண்ணன். ‘அண்ணனே சகலமும்’ என்று கொண்டாடும் தங்கை. இப்படி அண்ணனின் உயிரான அந்த தங்கை தனது திருமண விஷயத்தில் ஒரு அதிரடி முடிவு எடுக்கப்போக... நொறுங்கிப் போகிறான் அந்த பாசக்கார அண்ணன். இருந்தாலும் பாசம் விடுமா? கொல்கத்தாவில் கணவனுடன் இருக்கும் தங்கையை அவளுக்கே தெரியாமல் பார்த்து வர இந்த பாசமலர் அண்ணன் கொல்கத்தா பயணப்பட... அங்கே தங்கை இருக்கும் நிலை அதிரவைக்கிறது. அவள் கணவனின்...