உலக அளவில் நாசகார வேலைகளை செய்து வரும் சதிகாரன் தன் சிறுவயது நண்பன் என தெரிய வர…அவனை எதிர்கொள்ளத் தயாராகும் நேர்மையான நண்பனின் அதிரிபுதிரி ஆட்டமே இந்த எனிமி.

சிங்கப்பூரில் மகன் விஷாலுடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், தம்பி ராமையா. அவர்கள் இருக்கும் பகுதியில் பல தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் விஷாலின் நட்பு வட்டத்தில் உள்ள 11 பேர் சிலிண்டர் கேஸ் கசிவால் ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்து போக…

ஆனால், அது விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலை. தன் முன்னாள் நண்பன் விஷால் மூலம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்காக விரிக்கப்பட்ட மரண வலை என்பதை தெரிந்து கொண்ட விஷால், தன் சமயோசித முயற்சியில் அமைச்சரை காப்பாற்றி விடுகிறார். இப்போது தீவிரவாதத்துக்கு மூளையாக இருந்த நண்பனை எதிரியாக சந்திக்க களம் இறங்குகிறார். இந்த ‘நீயா நானா’ போட்டியில் ஆர்யாவின் மனைவி கொலையாக, அதை விஷால் தான் செய்திருக்க முடியும் என்று எண்ணிய ஆர்யா, அவரது தந்தையை பழி வாங்க…வெகுண்டெழும் விஷால் முன்னாள் நண்பனுக்கு முடிவு கட்ட புறப்பட… முடிவு அதிரடி தடாலடி கிளைமாக்ஸ்.

நல்ல நண்பனாக விஷால் அந்த கேரக்டரில் துலக்கி வைத்த விளக்காக பளிச்சிடுகிறார். அப்பாவின் கட்டளைக்குப் பணிவது, யாருக்கு பிரச்சினை என்றாலும் தன்னால் முடிந்த உதவியைப் பிரதிபலன் பாராமல் செய்வது, பிரச்சினையின் வீரியம் கண்டு பொங்கி எழுவது என தனது கேரக்டருக்கு நடிப்பால் நியாயம் சேர்க்கிறார்.

எதிர்நாயகன் என்றாலும் ஆர்யாவின் கேரக்டரில் வலு அதிகம். சிறுவயது தோழியை காப்பாற்ற அவள் தாய் மாமா உள்ளிட்டோரை போட்டுத் தள்ளுவதில் தொடங்கி, பின்னாளில் அவள் வாழ்க்கையிலும் நேசமுள்ள கணவனாக இடம் பிடிப்பது வரை நடிப்பில் ராஜாங்கமே நிகழ்த்துகிறார். மனைவியின் திடீர் மரணத்துக்கு முன்னாள் நண்பன் விஷால் தான் காரணம் என ஆக்ரோஷமாகும் இடத்தில் ஆர்யா, வில்லாதி வில்லனாக மனதில் நிலை கொண்டு விடுகிறார்.

கண்டிப்பான அப்பாவாக தம்பி ராமையாவும், மகன் விஷயத்தில் தப்புக்கணக்கு போட்ட அப்பாவாக பிரகாஷ்ராஜூம் பட்டை தீட்டிய நடிப்பில் பளபளக்கிறார்கள். ஆர்யாவின் காதல் மனைவியாக மம்தா மோகன்தாஸ், சிங்கப்பூர் போலீஸ் அதிகாரியாக மாரிமுத்து, ஆர்யாவின் குடும்ப நண்பராக ஜார்ஜ் மரியான் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள் என்பதை நடிப்பில் நிரூபிக்கிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் கேமரா சிங்கப்பூர் காட்சிகளில் சிகரம் தொடுகிறது.. தமனின் இசையில் அறிமுகப் பாடல் ஒகே. ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ். முன்னணி.

ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கிறார். புரிதல் இல்லாத நண்பர்களை லேட்டஸ்்ட தொழில் நுட்ப பின்னணியில் திரைக்கு தந்த விதத்தில் ரசிகர்களின் ஆனந்தமாகி இருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Enemy-movie-review-in-tamil.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/Enemy-movie-review-in-tamil-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்உலக அளவில் நாசகார வேலைகளை செய்து வரும் சதிகாரன் தன் சிறுவயது நண்பன் என தெரிய வர...அவனை எதிர்கொள்ளத் தயாராகும் நேர்மையான நண்பனின் அதிரிபுதிரி ஆட்டமே இந்த எனிமி. சிங்கப்பூரில் மகன் விஷாலுடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார், தம்பி ராமையா. அவர்கள் இருக்கும் பகுதியில் பல தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் விஷாலின் நட்பு வட்டத்தில் உள்ள 11 பேர் சிலிண்டர் கேஸ் கசிவால் ஏற்பட்ட திடீர்...