காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு செய்யும் பெரிய குடும்பம் ஒன்றின் பேரன் சிவகுமார். இந்த பேரனை பேரன்பு காட்டி சொந்த ஊரில் தனி ஆளாக வளர்க்கிறார், தாத்தா வரதராஜன். ஒரு கட்டத்தில், ஊதாரியாகச் சுற்றும் சிவகுமாரை திருத்தும் நோக்கில் அவனை சித்தப்பாவுடன் சென்னைக்கு அனுப்புகிறார்கள். அங்கிருக்கும் பணக்காரக் குடும்பத்துடன் உருவாகும் முட்டல், மோதல், காதல்…அதனால் மோதல். அதோடு பரம்பரைப் பகையும் இப்போது விசுவரூபம் எடுக்க… இந்நிலையில் தன்னை ஆளாக்கிய தாத்தாவுக்காக பேரன் சிவகுமார் போடும் சபதமே படம். அ

பட்டு நெசவாளர்களின் இன்னல்களையும், இயலாமையையும் சொல்ல முயற்சித்திருக்கும் ஆதி, அதை ஜாலியாக சொன்னதில் இயக்குனராகவும் சினிமாவுக்கு புதிய பாதை போட்டிருக்கிறார். அதோடு அலட்டல் இல்லாத நடிப்பு, அதிரடி ஆக்–ஷன் என இம்முறையும் நடிப்பில் நிலைநிறுத்திக் கொள்கிறார்.

அறிமுக நாயகி மாதுரிக்கு கமர்ஷியல் கதாநாயகி வேடம். தொடக்கத்தில் திணறினாலும் போகப்போக மனதுக்குள் தடம் பதித்து விடுகிறார்.

ஆதியின் தாத்தாவாக வரும் புதுவரவு இளங்கோ குமணன் சிறப்பான அறிமுகம். பொறுப்பான நடிப்பில் பல முகம் தெரிகிறது.
ஆதியின் சித்தப்பாவாக வரும் பிராங்க் ராகுல், கதையின் முக்கிய திருப்புமுனை கேரக்டர். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆதியின் நண்பராக வரும் ஆதித்யா கதிரின் ‘கலகல கேரக்டர்’ ரசிகன் வரை தொற்றிக்கொள்கிறது.

வில்லன் விஜய் கார்த்திக், அவருடைய தங்கை ரஞ்சனா, அம்மாவாக வரும் அபிநயா பாத்திரச் சிறப்பில் பளபளக்கிறார்கள்.
காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஆதி. ஆனால், கனமான கதைக்களம் என்பதால் காமெடி ஓரளவுக்கு மேல் சீரியசாகி விடுகிறது.
பட்டுப் புடவைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களை விட, இடைத்தரகர்கள் தான் வளமாக இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பது சிறப்பு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/202107311849573894_Tamil_News_Sivakumarin-Sabadham-movie-preview_SECVPF.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/10/202107311849573894_Tamil_News_Sivakumarin-Sabadham-movie-preview_SECVPF-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு செய்யும் பெரிய குடும்பம் ஒன்றின் பேரன் சிவகுமார். இந்த பேரனை பேரன்பு காட்டி சொந்த ஊரில் தனி ஆளாக வளர்க்கிறார், தாத்தா வரதராஜன். ஒரு கட்டத்தில், ஊதாரியாகச் சுற்றும் சிவகுமாரை திருத்தும் நோக்கில் அவனை சித்தப்பாவுடன் சென்னைக்கு அனுப்புகிறார்கள். அங்கிருக்கும் பணக்காரக் குடும்பத்துடன் உருவாகும் முட்டல், மோதல், காதல்...அதனால் மோதல். அதோடு பரம்பரைப் பகையும் இப்போது விசுவரூபம் எடுக்க... இந்நிலையில் தன்னை ஆளாக்கிய தாத்தாவுக்காக...