தயாரிப்பு : சிக்ஸர் என்டர்டைன்மென்ட் & மினி ஸ்டுடியோ
வெளியீடு :சோனி லிவ்
இயக்குனர் :விக்னேஷ் கார்த்திக்
ஒளிப்பதிவாளர் :கோகுல் பினாய்
இசையமைப்பாளர் :சதீஷ் ரகுநாதன்
படத்தொகுப்பு :சி எஸ் பிரேம்குமார்
மக்கள் தொடர்பு :யுவராஜ்
நடிகர்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ்
அனன்யா ராம்ப்ரசாத்
பாவல் நவகீதன்
சுபாஷ் செல்வம்

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் திட்டம் இரண்டு படத்தின் கதை, தமிழ் திரை உலகில் அதிக சொல்லப்படாத தன்பாலின மற்றும் பாலின சிறுபான்மை சமூகத்தினரின் காதல் குறித்த திரில்லர் பாணியிலான திரைக்கதை. எல் ஜி பி டி க்யூ ( LGBTQ) எனப்படும் ஜேனரில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கும் திரைப்படம், பதினெட்டு வயதிற்கு மேலான பார்வையாளர்களுக்கான படம் என்பதால் இவை டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பொருத்தமானது தான்.

ஆதிராவும், தீப சூர்யா பால்ய பிராயத்திலிருந்தே உயிர் தோழிகளாக வளர்கிறார்கள். பருவ வயதை எட்டிய பிறகு, வாழ்க்கையின் இயல்பான போக்கில் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறார்கள். ஆதிரா போலீஸாகிறார். தீப சூர்யா என்னவாகிறார்? என்னவானார்? இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு என்னவாகிறது? என்பதை இயக்குனர் ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் புதிய புதிய திருப்பங்களுடன் சுவராசியமாக சொல்லியிருக்கிறார்.

ஆதிரா சீருடை இல்லாத காவல் அதிகாரியாக படுக்கை வசதி உள்ள தனியார் பேருந்து ஒன்றில் இரவு நேர பயணத்தை சக பயணியான அர்ஜுன் என்பவருடன் தொடங்குகிறார். சற்றே நீளமான காட்சி என்றாலும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் ரசனையான கோணங்களால் அந்தக் காட்சி சுவையாக இருக்கிறது. முதல் காட்சியிலேயே கதையை இயக்குனர் தொடங்கியிருப்பது புத்திசாலித்தனம்.

தீப சூர்யா என்ற கதாபாத்திரம் தோற்றத்தில் பெண்ணாக இருந்தாலும், உணர்வில் எதிர் பாலினமாக இருக்கிறார். அதாவது தன்னை ஆணாக உணர்கிறார். இதன் காரணமாகவே கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் சக மாணவனுடன் பழகுகிறார். இது திரைக்கதையில் அந்த கதாபாத்திரப் படைப்பை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. அதன் பிறகு தீப சூர்யாவின் பாலின தடுமாற்றத்தை ஏற்காத அவரது பெற்றோர்கள், மருத்துவர் ஒருவருக்கு தீப சூர்யாவை திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். தீப சூரியாவுடன் சாத்வீகமான முறையில் சந்தோஷத்துடன் தாம்பத்தியத்தை தொடங்க காத்திருக்கும் போது, அவரின் பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு தீப சூர்யாவை மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் அர்ஜுனாக உருவ மாற்றம் செய்கிறார். அத்துடன் தீப சூர்யா என்ற பெண் உருவம் இறந்துவிட்டதாக சமூகத்தை நம்பவைக்கிறார்கள். இந்த தருணத்தில் இறந்துவிட்ட தீப சூர்யாவின் மரணம் குறித்து அவரது உயிர் தோழியும், போலீஸுமுமான ஆதிரா விசாரிக்கத் தொடங்குகிறார். இதற்கிடையே அர்ஜுனாக உருவ மாற்றம் அடைந்திருக்கும் தீப சூர்யா, தன் சிறு பிராய உயிர் தோழியான ஆதிராவுடன் இணைந்து வாழ ஆசைப்படுகிறார். அவரின் இந்த ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் திரைக்கதை.

இதில் ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிக குளோசப் காட்சிகள் இடம் பெற்றது இந்த திரைப்படமாக தான் இருக்கும். தீப சூர்யாவாக நடித்திருக்கும் நடிகை அனன்யா ராம்பிரசாத்தின் நடிப்பும், அர்ஜுனாக நடித்திருக்கும் நடிகர் சுபாஷ் செல்வத்தின் நடிப்பும் ரசிகர்களிடம் பாராட்டை பெறும். திரைக்கதையை நகர்த்துவதற்காக மாற்றுத்திறனாளியாக நடித்து, கதையின் விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கும் நடிகர் பாவல் நவகீதனின் நடிப்பும் நன்றாக இருந்தது.

பாடல்களை விட பின்னணி இசையில் இசை அமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் தன் திறமையை நிரூபித்திருக்கிறார். திரில்லர் படங்களுக்குரிய படத்தொகுப்பை அதிலும் இடைவேளையின் போது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் படத்தை தொகுத்திருக்கும் படத் தொகுப்பாளரை பாராட்டலாம். எல் ஜி பி டி க்யூ வரிசையிலான படங்களை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டிருப்பது இப்படத்தின் வணிகத்திற்கான சரியான அடையாளம். இதன் பின்னணியில் உழைத்த திரையுலகப் பிரபலம் தனஞ்ஜெயனுக்கும் வாழ்த்துக்கள்.

திட்டம் இரண்டு – திரில்லர் ரவுண்டு.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/07/8d2b2175-041f-4a51-bfc4-fdb0cb44d749-1024x512.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/07/8d2b2175-041f-4a51-bfc4-fdb0cb44d749-150x150.jpgrcinemaதிரை விமர்சனம்தயாரிப்பு : சிக்ஸர் என்டர்டைன்மென்ட் & மினி ஸ்டுடியோ வெளியீடு :சோனி லிவ் இயக்குனர் :விக்னேஷ் கார்த்திக் ஒளிப்பதிவாளர் :கோகுல் பினாய் இசையமைப்பாளர் :சதீஷ் ரகுநாதன் படத்தொகுப்பு :சி எஸ் பிரேம்குமார் மக்கள் தொடர்பு :யுவராஜ் நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் அனன்யா ராம்ப்ரசாத் பாவல் நவகீதன் சுபாஷ் செல்வம் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் திட்டம் இரண்டு படத்தின் கதை, தமிழ் திரை உலகில் அதிக சொல்லப்படாத தன்பாலின மற்றும் பாலின சிறுபான்மை சமூகத்தினரின் காதல் குறித்த திரில்லர் பாணியிலான திரைக்கதை. எல் ஜி...