மகாராஷ்ட்டிரா  மாநில அரசும், புனே ஃபிலிம் பவுண்டேசனும் இணைந்து நடத்தும் 19-வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வாகியிருப்பது பற்றி கட்டில் பட இயக்குநர் பகிர்ந்தவை.

படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு, ”வருடம்தோறும் புனே சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றின் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. அதில் கட்டில் படத்துக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தவிர, இந்த தருணத்தில் புதுமுயற்சியாக கட்டில் திரைப்பட உருவாக்கம்என்ற நூலை வெளியிடுகிறேன்.

‘கட்டில் திரைப்பட உருவாக்கம்’ என்ற நூலின் முகப்பு அட்டை

சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரி வழங்கிய சாதனையாளர்கள் சிலர் கட்டில் படத்திலும் அவர்களுடைய பங்களிப்பை தனிச்சிறப்புடன் வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆளுமைகளின் செயற்பாட்டால் கட்டில் எப்படி உருவானது என்பதை சொல்வதே இந்த நூலின் நோக்கம்” என்றார்.

நிகழ்ச்சியில், கணேஷ்பாபுவோடு படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

படம் பற்றி…

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் மற்றும் கீதா கைலாசம், ‘மாஸ்டர்’ நிதீஷ், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், கன்னிகா, ஓவியர் ஸ்யாம், செம்மலர்அன்னம், ‘மெட்டிஒலி’சாந்தி, ‘காதல்’ கந்தாஸ், சம்பத்ராம், ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை, திரைக்கதை, வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்து, மதன்கார்க்கி பாடல் எழுத, சித் ஸ்ரீராம் ஒரு பாடலை பாடியுள்ளார். விரைவில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/IMG_5154-1024x683.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/03/IMG_5154-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்மகாராஷ்ட்டிரா  மாநில அரசும், புனே ஃபிலிம் பவுண்டேசனும் இணைந்து நடத்தும் 19-வது புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கட்டில்’ தமிழ் திரைப்படம் தேர்வாகியிருப்பது பற்றி கட்டில் பட இயக்குநர் பகிர்ந்தவை. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு, ”வருடம்தோறும் புனே சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றின் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. அதில் கட்டில் படத்துக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தவிர,...