டொரொன்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக ஒரு கோடி அன்பளிப்பு! தமிழக முதல்வருக்கு கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவிப்பு!
கனடாவின் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அன்பளிப்பு வழங்குவதாக கடந்த பிப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிதியுதவியை தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
