இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள், பக்திமான்கள், துறவிகள் மிகுந்த நாடு. இவையனைத்தும் இணைந்து இன்றைய உலகில் ஆன்மிகத்தின் தலைமையிடமாக நம் நாட்டை நிலை நிறுத்தியுள்ளது. பழம்பெரும் பண்பாட்டை கடைபிடிக்கும் துறவிகள், பக்திமான்கள், தத்துவவாதிகள் கும்பமேளாவில் ஒன்றினைந்து தங்களது அறிவுரையை, தத்துவங்களை மக்களுக்கு அளித்து சமூகத்தை நல்வழிபடுத்தும் விழாவே கும்ப சந்தேஷ் ஆகும்.

கும்ப சந்தேஷ் எனும் இந்த விழாவின் முதல் புள்ளியாக சங்கர யாத்திரை எனும் மிஷன் 5151 Gramodaya Chamber of Commerce and Technology Mission (GCOT) நிறுவனத்தால் துவங்கப்பட்டிருக்கிறது. கும்ப சந்தேஷ் யாத்திரை கடந்த வாரம் வெள்ளிகிழமை (2021 பிப்ரவரி 19) தெலுங்கானா மாநிலத்தில் துவங்கியுள்ளது.

இந்த யாத்திரை தொடர்ந்து சென்னை, கன்னியாகுமரி வழியே பயணமாகி வட இந்தியாவின் பல பெரு மற்றும் சிறு நகரங்கள் வழியே பயணமாகி இறுதியாக ஹரித்துவாரில் ஆன்மிக கும்ப மேளாவில் இணையவுள்ளது. துறவிகள், முனிவர்கள், பக்திமான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்விழாவில் இணைந்து மனிதர்கள் வாழ்வை நல்வழிப்படுத்தும் அறிவு மோட்சத்தை வழங்குவார்கள்.

கும்ப சந்தேஷ் யாத்திரை அதிகாரப்பூர்வமாக திருவேணி சங்கமம், கன்னியாகுமரி, மகாத்மா காந்தி மண்டபத்தில் 27 ம் தேதி அன்று, மதிப்புமிகு தலைமையாளர்களான Dr.வினய் சஹஸ்ரா சேர்மன், ICCR (INDIAN COUNCIL OF CULTURAL RELATIONS ), ஶ்ரீ பொங்குலடி ரெட்டி இணை செயலாளர் பிஜேபி தமிழ்நாடு முன்னிலையில் துவங்கவுள்ளது.

கும்ப சந்தேஷ் குழு GCOT மற்றும் MISSION 5151 சார்பில் மறைந்த ஶ்ரீ TN சேஷன் நினைவாக விருது ஒன்றினை வழங்க குழு உறுப்பினர்களிடம் முன்மொழிந்துள்ளது. ஜோதிட மகான்கள் மற்றும் ஆணைய நிறுவனர்களின் அனுமதிக்காக GCOT குழு காத்திருக்கிறது. ஶ்ரீ TN சேஷன் அவர்களின் படத்திற்கு மலர்தூவி வணங்கி அவரின் ஆசியை பெற்றுள்ளார்கள்.

இந்த புனித யாத்திரையின் ஒரு பகுதியாக GCOT மற்றும் MISSION 5151 குழுவினர் டெல்லி வசந்த் வழிகாட்டுதலின்படி ஶ்ரீ TN சேஷன் படத்திற்கு மலர்தூவி வணங்கி அவரின் ஆசியினை பெற்றுள்ளார்கள். இதில் டெல்லி வசந்த் நிறுவனர் மற்றும் எம் டி (GCOT), MISSION5151 உறுப்பினர்கள், ப்ராயக் ராஜ்ஜை சேர்ந்த ஜோதிடவியலாளர் ஶ்ரீ ஆச்சார்யா அவிநாஷ் ராய், ஶ்ரீ நக்சன் ஃபெர்ணாண்டோ, மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லி வசந்திற்கு, முன்னாள் தேர்தல் தலைமை அதிகாரி மறைந்த TN சேஷன் வழிகாட்டியாக விளங்கியவர். அவரை ஒரு பிரபல ஆளுமையாக மட்டுமே அனைவரும் அறிவர். மிகப்பெரும் ஜோதிட வல்லுநராக அவரது மற்றொரு முகம் பலரும் அறியாதது. அவர் ஒரு பெரும் அறிவாளி.

தற்காலத்திய அறிவையும், ஆதிகால அறிவியலையும் கற்று தேர்ந்தவர். ஆதலால் தான் டெல்லி வசந்த், GCOT மற்றும் MISSION 5151 குழுவினர் அவரை வணங்கினர். GCOT நிறுவனர் டெல்லி வசந்த் மறைந்த TN சேஷன் அவர்களிடம் பாடம் கற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

GCOT நிறுவனர் டெல்லி வசந்த் இந்த யாத்திரை குறித்து கூறும்போது…

இதனை கன்னியாகுமரியில் தொடங்க காரணம் தமிழர்கள் தங்கள் வரலாற்றையும் கலாச்சராத்தையும் உயிராக நேசிப்பவர்கள் என்பதால் தான் என்றார். மேலும் கும்ப சந்தேஷ் யாத்திரை பல்லவ, சோழ மன்னர்களால் கடல் கடந்த தமிழர்களின் கலாச்சார பெரு வரலாற்றை நினைவு கூறி போற்றும்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/WINSONPRO-1-1024x682.jpeghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/02/WINSONPRO-1-150x150.jpegrcinemaசினிமா செய்திகள்செய்திகள்தமிழக செய்திகள்இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள், பக்திமான்கள், துறவிகள் மிகுந்த நாடு. இவையனைத்தும் இணைந்து இன்றைய உலகில் ஆன்மிகத்தின் தலைமையிடமாக நம் நாட்டை நிலை நிறுத்தியுள்ளது. பழம்பெரும் பண்பாட்டை கடைபிடிக்கும் துறவிகள், பக்திமான்கள்,...