சினி நிகழ்வுகள்நடிகைகள்

நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று!

1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் இதே டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு.

சின்ன வயசில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைச்சுப்புட்டாங்க,

கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. ,

தமிழகத்தையும்ன் தாண்டி பல திரைகளை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.

17 வருடங்கள் தென்னிந்திய சினிமாவை தனது கவர்ச்சியான கண்களாலும், சொக்கவைத்த உதடுகளாலும் இளவட்டங்கள் உள்பட அனைத்து தரப்பு வயதினர்களையும் கிறங்கடித்தார் இந்த கவர்ச்சிப்புயல் சில்க் ஸ்மிதா,

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சொந்தப்படம் தயாரிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வி தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை அவரது மரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

அந்த சில்க் ஸ்மிதா மறைந்து இருபத்து நான்கு வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருவது ரசிகர்களின் மனதில் அவர் இன்னும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *