ஏழை எளியோர் பஸ்ஸில் போகலாம், டிரெய்னில் போகலாம். விமானத்தில் போக முடியுமா?

முடியும் என சாதித்துக் காட்ட ஹீரோ எடுக்கும் முயற்சிகளின் ‘பறபற’ப்பான எபிசோடுகளே ‘சூரரைப் போற்று.’

‘ஏர்டெக்கான்’ நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் எழுதிய சிம்பிள் ஃபிளை என்ற புத்தகத்தை தழுவி சுறுசுறு திரைக்கதையால் அமர்க்களப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

ஊரில் ரயில் நின்று செல்ல தன்னுடைய அப்பா மனு போட்டுக் கொண்டிருக்க, அதெல்லாம் வேலைக்காகாது என அதிரடியாய் தர்ணாவில் குதிப்பதாகட்டும், அப்பாவோடு பேச்சு வார்த்தை இல்லாது போன சூழலைக் கடந்து போவதாகட்டும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானப்படை அதிகாரியாக காட்டும் கம்பீரமாகட்டும், ஏற்ற சபதத்தை நிறைவேற்றுவதில் காட்டும் உறுதியாகட்டும் சூர்யா வருகிற அத்தனை பிரேமிலும் என்னைப் பார்யா என்கிறார். நடிப்பு அத்தனை புதுசு!

அகன்று விரிந்த கண்களாலேயே அசத்தலான நடிப்பைக் கொட்டுகிறார் கதைநாயகி அபர்ணா பாலமுரளி!

சூர்யாவின் அப்பாவாக ‘பூ’ ராமு. நடிப்பில் எப்போதும் போல் அழுத்தமான முத்திரை!

ஊர்வசியின் நடிப்பில் இதுவரை இல்லாத யதார்த்தம்.

பெரும்பாலும் ஜாலி வெங்கட்டாகவே வருகிற காளி வெங்கட்டுக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி நடிக்கிற வாய்ப்பு!

வெள்ளந்தி வெகுளியாக கருணாஸ், சூர்யாவின் நண்பர்களாக வருகிற விவேக் பிரசன்னா – கிருஷ்ணகுமார், ஆர்.எஸ்.சிவாஜி, பேராசிரியர் ஞானசம்பந்தன், வினோதினி வைத்தியநாதன், பரேஷ் ராவல், அச்யுத்குமார், ராமச்சந்திரன் துரைராஜ் என இன்னபிற கதாபாத்திரங்கள் கச்சிதம்!

அப்படியும் இப்படியுமாய் வந்து போகிற கேரக்டரில் மோகன்பாவுக்கு கவனம் ஈர்க்கும்படியான ரீ என்ட்ரி!

‘வானம் ஒண்ணும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லடா.’ விஜயகுமாரின் வசனங்களின் வார்த்தைகளில் அங்கங்கே கங்கு!

ஜி.வி.பிராகாஷின் இசையில் ஆல்பமாக ஹிட்டடித்த பாடல்கள் காட்சியாக ரசிப்பது கூடுதல் சுவை. பின்னணி இசைக்கான மெனக்கெடலுக்காக கொடுக்கலாம் மெடல்!

படத்தின் பெரும்பலம் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு!

படத்தின் நீளம் விமானத்தின் ரன் வேயைப் போல… ஆம், கொஞ்சம் நீ…….ளம்!

அங்கங்கே லாஜிக் மீறல்கள், சினிமாத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், நீளமாக இரு அதை பொருட்படுத்த விடாத சுதா கொங்கரா – ஷாலினி உஷாதேவி கூட்டணியின் திரைக்கதைக்கு பெரிதாய் ஒரு பூங்கொத்து!

சூரரை போற்று – ஒட்டுமொத்த டீமையும் போற்றலாம்!

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/12-1-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/12-1-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்திரைப்படங்கள்ஏழை எளியோர் பஸ்ஸில் போகலாம், டிரெய்னில் போகலாம். விமானத்தில் போக முடியுமா? முடியும் என சாதித்துக் காட்ட ஹீரோ எடுக்கும் முயற்சிகளின் 'பறபற'ப்பான எபிசோடுகளே 'சூரரைப் போற்று.' 'ஏர்டெக்கான்' நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, அவர் எழுதிய சிம்பிள் ஃபிளை என்ற புத்தகத்தை தழுவி சுறுசுறு திரைக்கதையால் அமர்க்களப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. ஊரில் ரயில் நின்று செல்ல தன்னுடைய அப்பா மனு போட்டுக் கொண்டிருக்க, அதெல்லாம் வேலைக்காகாது என...