கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின்
சொல் அகராதி : குறுஞ்செயலி
4.25 இலட்சம் சொற்களுடன் தமிழ் – ஆங்கில அகராதி
தமிழ்க் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்திவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘சொல் அகராதி’ (chol agaraadhi) எனும் ஆண்டிராய்ட் ஆப்பிள் கருவிகளுக்கான குறுஞ்செயலியை இன்று வெளியிடுகிறது.
சங்ககால இலக்கியச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், நிகழ்காலக் கலைச்சொற்கள் என்று 4.25 இலட்சம் சொற்களைச் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுஞ்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொற்களைத் தேடும் வசதியோடு வெளியிடப்படுகிறது.
தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல், சொல்லுக்கான பொருள் விளக்கம், எளிய முறையில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு, அச்சொல்லுக்கு இணையான பிற சொற்கள், தொடர்புடைய சொற்கள், உயர் பயன்பாட்டுச் சொற்களுக்கான ஒலி மற்றும் படங்கள், பதினாறு இலக்க எண்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலச் சொல் வடிவம் என்று பல்வேறு உள்ளடக்கங்களோடு இந்த அகராதி வெளியிடப்படுகிறது.
சட்டம், வேளாண்மை, அரசியல், கணினியியல், கணிதம், வேதியியல், புவியியல், உயிரியல் போன்ற 40 துறைகளின் சொற்கள் சொல் அகராதியில் துறைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிய கலைச் சொற்கள் இந்த அகராதியில் சேர்க்கப்படுகின்றன.
விலையில்லா விளம்பரமில்லா குறுஞ்செயலியாக இது உலகத் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. www.karky.in/apps என்ற தளத்தின் மூலம் இந்தக் குறுஞ்செயலியை ஆண்டிராய்ட் மற்றும் ஆப்பிள் கருவிகளில் தரவிறக்கலாம்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/ku-683x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/11/ku-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் சொல் அகராதி : குறுஞ்செயலி 4.25 இலட்சம் சொற்களுடன் தமிழ் - ஆங்கில அகராதி தமிழ்க் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளைக் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்திவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் ‘சொல் அகராதி’ (chol agaraadhi) எனும் ஆண்டிராய்ட் ஆப்பிள் கருவிகளுக்கான குறுஞ்செயலியை இன்று வெளியிடுகிறது. சங்ககால இலக்கியச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், நிகழ்காலக் கலைச்சொற்கள் என்று 4.25 இலட்சம் சொற்களைச் சேகரித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுஞ்செயலி தமிழ்...