நுங்கம்பாக்கம் திரைப்படம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும்- இயக்குநர் அதிரடி

“நுங்கம் ரயில்வே ஸ்டேசனில் நடைபெற்ற சுவாதி கொலை தமிழகம் தாண்டி இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. உடனே இயக்குநர் ரமேஷ் செல்வன் அந்தச்சம்பவத்தை சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படமாக்க முடிவெடுத்தார். அஜ்மல் ஐரா ஆகியோர் நடிப்பில் உருவான அப்படம் சுவாதிகொலை வழக்கு என்ற பெயரிலே வெளியாக இருந்த நேரத்தில் பல பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தாண்டி இப்பொழுது படம் வரும் 24-ஆம் தேதி சினிப்லிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசும்போது,
” மேட்டர் படம் எடுத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். சமூகத்திற்கு தேவையான படம் எடுத்தால் தான் கேள்வி கேட்பார்கள். இந்தப்படம் நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” என்று குறிப்பிட்டார். விழாவில் தயாரிப்பாளர் ரவிதேவன், நடிகர் அஜ்மல், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
