விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , ” மாயாண்டி குடும்பத்தார் ” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் ” வெறி ( திமிரு – 2 ) ” அருவா இயக்கி முடித்த கையோடு சூட்டோடு சூடாக தற்போது ஒரு ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த ” யானை ” என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பில் யானை பலம் பொருந்திய முன்னனி நடிகை ஒருவர் கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகை, நடிகர்கள், நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன்

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கவுளார்.

எடிட்டிங் – வி.டி.விஜயன்

கலை – மணி கார்த்திக்

ஸ்டண்ட் – கனல்கண்ணன்

நடனம் – தினேஷ், பிருந்தா

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – மன்னன்காடு M.குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா

படம் பற்றி இயக்குனர் தருண்கோபி கூறியதாவது..

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாக போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண் தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும். என்ற மையக்கருத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக, ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கதை, மக்கள் அன்றாட சந்திக்கும் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படத்தை இயக்கவுள்ளேன்.

படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களில் ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது என்கிறார் இயக்குனர் தருண்கோபி.