நிசப்தம் படத்தின் பாடலாசிரியர் பேட்டி
உலகின் விழியாய் உண்மையின் மொழியாய் வாழும் அன்பு ஊடக நண்பர்களே!
என்றும் எனக்கு
ஆதரவும், அரவணைப்பையும் வழங்கும் சகோதரர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இந்த கடிதம் வாயிலாக மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி ,மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில்….
இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையில்….
ஹேமந்த் மதுகர் இயக்கும் திரைபடம்… #சைலன்ஸ்.
சஸ்பென்ஸ், த்ரில்லராகவும்,
மென்மையான ஆழமான அன்பின்
மறுமொழியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த சைலன்ஸ் திரைப்படம் ஆகும்.
இப்படத்தில் ஐந்து பாடல்களை நான் எழுதி உள்ளேன்.
முதல் பாடல்….
காதலன் காதலி மீதுள்ள ஈர்பை கூறும் பாடல்
“நீயே நீயே நான் காணும் உலகம் நீயே….”
பாடியவர் : அலப்ராஜ்
இரண்டாவது பாடல்….
காதலன் மீது காதலி ,காதலி மீது காதலன்
அன்பை உணர்த்தும் பாடல்….
“முதல் உணர்வே புது உணர்வே பாடலை
இதயம் உன்னை ரசித்திடுதே …..”
பாடியவர் : கார்த்திக் மற்றும் ஹரிணி
மூன்றாவது பாடல்….
மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம்
அதன் வலிகளைக் கூறும் பாடல்…
“என் பெண் எல்லாம் இங்கே நஞ்சான நெஞ்சே நான் கண்டதே”
பாடியவர் : விஜய் ஜேசுதாஸ்
நான்காவது பாடல்….
உயிர் தோழியின் பிரிவினை வெளிப்படுத்தும் பாடல்…
“நான் உணர்வோடு விழிக்கின்றேன்
உன் நேசம்
கண்ணீரில் தீட்டுகிறேன் என் சோகம்…”
பாடியவர் : சின்மயும்
பக்தி கீர்த்தனையில்
ஐந்தாவது பாடல்….
“சிவ சக்தி பலம் உனக்கு
சித்தி தரும் அருள் உனக்கு”
பாடியவர் : சக்தி முரளிதரன் ஆகியோர் பாடியுள்ளார்.
ஆகிய வேறு வேறு சூழலுக்கு ஏற்ப பாடலுக்கு வரிகளை
எழுதி உள்ளேன்.
மேலும் இப்படம்
இத்திரைப்படம் OTT தளத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது.
உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் விரும்பும்
உங்கள்
கருணாகரன்.
திரைப்பட பாடலாசிரியர்
28:09:2020