தன்யாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு உருவாகும் படம்! எஸ்.ஆர் பிரபாகரன் இயக்குகிறார்

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், எடிட்டர் டான் போஸ்கோ கூட்டணியில், இது கதிர்வேலன் காதல் உருவானது. தற்போது சசிகுமார் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் உருவாகி உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழுவினர் இருக்கிறார்கள்.
பிரபாகரன் – டான் போஸ்கோ
இந்நிலையில் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், எடிட்டர் டான் போஸ்கோ கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த தன்யா ரவிச்சந்திரன், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற நடிகர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
