அதிகாரத்திற்கு எதிராக கலைஞர்கள் குரல் கொடுத்தால் தான் அவர்கள் மக்கள் கலைஞர்கள். அதை சமீபத்தில் நடிகை கங்கணா ரணாவத் நிரூபித்துள்ளார். அவரை வழிமொழிந்து நடிகர் விஷாலும் தன்னை அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரானவர் என்று காட்டியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து கங்கணா ரணாவத் மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்கும் வரை சென்றது விவகாரம். ஆனாலும் கங்கணா ரணாவத் தொடர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார். இதை நடிகர் விஷால் பாராட்டியுள்ளார்.

ட்விட்டரில் விஷால் கூறியிருப்பதாவது:

“அன்பார்ந்த கங்கணா,

உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள். எது சரி, எது தவறு என்பது பற்றி குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை.

இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஆனாலும், அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டும் வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்குகிறது.

1920-களில் பகத்சிங் செய்ததற்கு ஒப்பானது நீங்கள் செய்திருக்கும் காரியம். பிரபலமாக இருந்தால் மட்டுமல்ல, சாதாரண மனிதர் கூட, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராகப் பேச இது ஒரு உதாரணமாக இருக்கும்.

உங்களுக்கு என் வாழ்த்துகள், தலைவணங்குகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்”.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG_20200911_103844-1024x478.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/IMG_20200911_103844-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்தமிழக செய்திகள்அதிகாரத்திற்கு எதிராக கலைஞர்கள் குரல் கொடுத்தால் தான் அவர்கள் மக்கள் கலைஞர்கள். அதை சமீபத்தில் நடிகை கங்கணா ரணாவத் நிரூபித்துள்ளார். அவரை வழிமொழிந்து நடிகர் விஷாலும் தன்னை அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரானவர் என்று காட்டியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து கங்கணா ரணாவத் மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் அவருக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டை ஆளுங்கட்சி...