சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘கைவச்சாலும் வைக்காம’ என்ற பாடல்.

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் வைக்காம’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.

இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, ‘டிக்கிலோனா’ படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை ‘டிக்கிலோனா’ படத்திலும் இடம்பெறவுள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் ‘டிக்கிலோனா’ ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

அதே போல் ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் இப்போதும் ட்ரெண்ட்டாகி வருவது இதற்கு ஒரு சான்று. சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக ‘டிக்கிலோனா’ உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படக்குழுவினரோ ஹிட் கன்பார்ம் என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகி பாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ் – முனீஸ்காந்த் – ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யூடியூப்’ புகழ் பிரசாந்த் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளதே இந்த வெற்றிக்குச் சான்று. இந்தப் படத்தின் கதைகளத்தை நம்பி முதலீடு செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி சினீஷ் என படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே டபுள் ஹாப்பி.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

பார்வையாளர்களை எப்படியெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பது என்பதற்காகவே இரவு- பகல் பாராமல் உழைத்து வருகிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. நமக்கெல்லாம் ஒரு தழைவாழை காமெடி விருந்து விரைவில் காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *