சினி நிகழ்வுகள்

திரை விமர்சனப் போட்டி!

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்துவரும் திரைப்படச் சங்கம் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன். அதனுடன் இணைந்து – இந்தியாவுக்கான தென்கொரியத் தூதரகம் (Consulate of Korea) திரை விமர்சனப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. இதில் பங்குகொள்ள, கொரியப் படங்களை விரும்பிப் பார்க்கும் திரை ஆர்வலராக இருந்தால் போதும். உலக அரங்கில் விருதுகளை வென்ற பல கொரியப் படங்கள், ஆண்டுதோறும் சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்படுகின்றன. அவற்றில் உங்களைப் பெரிதும் கவர்ந்த கொரியப் படத்துக்கு விமர்சனம் எழுத வேண்டும். படத்தின் கதையைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, எந்தக் கலையம்சத்தின் கீழ் உங்களை அது அதிகமாகக் கவர்ந்தது என்பதை 100 வார்த்தைகளுக்கு மிகாமல், ‘நறுக்கென்ற’ விமர்சனமாக iindocine.ciff@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விமர்சனங்களை ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். விமர்சனப் போட்டியில் வெல்லும் திரை ஆர்வலருக்கு தூதரகம் நடத்தும் விழாவில் விருது வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *