டேனி- விமர்சனம்
ஒரு கொலையும் கொலை சார்ந்த விசாரணையும் டேனி படம் என்று ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதை நரேட் செய்திருக்கும் விதத்திலும் படத்தில் எங்கேயும் துருத்தாத அளவில் நாயை இணைத்த விதத்திலும் படம் கவனிக்க வைக்கிறது.
தேனி மாவட்டப் பின்னணியில் உள்ள கதை என்பதால் மண்வாசனை மேக்கிங் தேனியாக இனிக்கிறது. படத்தில் நடித்த நடிகர்களில் நாயகி வரலெட்சுமி வழக்கம் போல் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தைத் தேடும்போது அவருக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்படுகிறது. அந்த இழப்பிற்கு பழி வாங்குவதன் மூலம் அவரது கேரக்டரும் அந்தக் கேரக்டரின் ட்ராவலும் மிக நேர்த்தியாக இருக்கிறது. அவரும் அப்பணியை செவ்வனே செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் துரை சுதாகர். போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான கேரக்டரில் அசத்தியுள்ளார். மேலும் வேல.ராமமூர்த்தி உள்பட அனைவரும் தங்கள் பங்களிப்பை தங்கு தடையின்றி செய்துள்ளார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பின்னணி இசையை சரியான கோர்வையோடு கோர்த்திருக்கிறார் இசை அமைப்பாளர். படத்தில் சில துண்டு காட்சிகளுக்கு எடிட்டர் கத்தரிப் போட்டிருக்கலாம். படத்தின் கதைக்களத்தில் இருக்கும் கனம் திரைக்கதையில் இன்னும் கூட மெருகேறி இருந்தால் டேனி பாய்ச்சல் இன்னும் கம்பீரமாக இருந்திருக்கும். ஒரு சமூக அவர்னெஸ் உள்ள படமாக டேனியை தயாரித்திருப்பதால் தயாரிப்பாளர் பி.ஜி முத்தையாவிற்கு ஸ்பெசல் பாராட்டு!
இணையவழியில் சின்னத்திரையில் படம் பார்த்தாலும் படம் இதயவழியில் பயணிக்கிறது.