சென்னை தியாகராயநகரிலுள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும் ஓ.டி.டி முறையில் திரைப்படங்கள் வெளியாவது குறித்து ஆரம்பத்தில் பயந்ததாக கூறிய அவர், அவ்வாறு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியிருப்பது மக்கள் திரையரங்கில் படம் பார்ப்பதற்கு விரும்புவதை காட்டுவதாக தெரிவித்தார்