பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இருவரின் திருமணத்தை ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த சூரிய தேவி என்கிற பெண் மீது நடிகை வனிதா புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியபோது சூரிய தேவி என்ற லேடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும் என வனிதா கேட்டுக்கொண்டார் ஆனால் ஏற்கனவே பதிவிட்ட வீடியோக்களை அழிக்காமலும் மேலும் புதிது புதிதாக வனிதா தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சூரிய தேவி என்கிற பெண்ணை கைது செய்துள்ளனர்.