சினி நிகழ்வுகள்

உலக இசை தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம்

உலக இசை தினத்தை முன்னிட்டு, உலகத் தமிழ் சங்கங்களுடன் இணைந்து இசையமைப்பாளர்
கங்கை அமரனை கெளரவிக்கும் டோக்கியோ தமிழ்ச்சங்கம் மற்றும் மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம்

அன்னக்கிளியில் இளையராஜாவுடன் 1975-ல் துவங்கிய இசைப்பயணம், பாடலாசிரியராக 2500-க்கு மேற்பட்ட பாடல்கள், இயக்குநராக 17 படங்கள், இசையமைப்பாளராக 127 படங்கள், நடிகராக 50-க்கு மேற்பட்ட படங்கள், பாடகராக 300-க்கும் மேற்பட்ட படங்கள், தயாரிப்பாளராக 4 படங்களில் பணியாற்றிய கங்கை அமரனை கெளரவிக்கும் பொருட்டு உலக இசை தினமான வரும் ஜூன் 21-ம் தேதி அன்று டோக்கியோ தமிழ்சங்கம் (Tokyo Tamil Sangam)சார்ந்த
கணேசன் ஹரி நாராயணன், மலேசியாவை சேர்ந்த தமிழ் எக்ஸ்பேட்ஸ் மற்றும் உலகெங்கும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து உலக இசை தினத்தை விமரிசையாக நேரலையில் கொண்டாடவிருக்கிறது.

கொரோனாவின் பாதிப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மனதிற்கு சிறிதளவில் தங்களால் இயன்ற அளவிற்கு மக்களின் மனதிற்கு, இதம் தரும் அளவிற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்ச்சில் தமிழ் சினிமாவில் 45 வருடத்திற்கு மேல் பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகம் கொண்ட கங்கை அமரன் கெளரவிக்கப்படுகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் கங்கை அமரனுடன் தமிழ் திரையுலக பிரமுகர்கள் மற்றும் தமிழ் திரையுலக முன்னணி பாடகர்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களை சேர்ந்த பாடகர்கள் தங்கள் இசையுடன்
நேரலையில் அவருடன் பயணிக்கிறார்கள்.

இது இசை வரலாற்றில் முதல் முறையாக நேரலையில் ஓர்இசை வேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. இசையின் இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணமாய் ஒரு மாபெரும் தவம் செய்த கலைஞனுக்கு இசையால் மகுடம் சூட்டும் வரமாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கபட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த தி பனானா லீஃப் அப்போலோ, துபாய் ரமேஷ் ராமகிருஷ்ணனின் லீப் ஸ்போர்ட்ஸ், Dr.J.ஹரிஹரன் உறுதுணையுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி இந்திய நேரம் வரும் ஞாயிறு (21/6/2020) மாலை 4 மணிக்கு, மலேசியா நேரம் மாலை 6:30, ஜப்பானிய நேரம் இரவு 7:30 மணிக்கு டோக்கியோ தமிழ்ச் சங்கம், மலேசியா தமிழ் எக்ஸ்பேட்ஸ் மன்றம், பொன்மாலை பொழுது UAE, தாய்லாந்து தமிழ்ச் சங்கம், இந்தோனிசியா தமிழ் சங்கம், தமிழர் INC, மெல்போர்ன், ஆஸ்திரேலியா மணிலா தமிழ்ச் சங்கம், டாமன் முத்தமிழ் மன்றம், UAE தமிழ்ச் சங்கம், ஸ்லவ் தமிழ்ச் சங்கம் UK, டிவின் லைட்ஸ் தமிழ் அசோசியேஷன் மின்னேஸ்டா USA, ஐ ஃபார் இந்தியா, UK, தமெனிக்கா TV, கலிபோஃர்னியா டிவி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட உலக தமிழ் சங்கங்களின் ஃபேஸ்புக் பக்கங்களிலும் சாணக்யா யூடியூப் சேனலிலும் நேரலையாக
ஒளிபரப்பாகிறது.

 

அன்புள்ள ஊடக நண்பர்களுக்கு, டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பாக வணக்கம். எங்களின் முதல் முயற்சியாக “கிரேஸி கிரியேஷன்ஸ்” உடன் இணைந்து நடத்திய கிரேஸி மோகனின் நினைவலை நிகழ்ச்சிக்கு தாங்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள்.

தற்போது உலகெங்கும்
“கொரோனாவால்” மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். அந்த பாதிப்பில் இருந்து, சிறிதேனும் புத்துணர்வு பெறும் வகையில் உலக தமிழ்ச் சங்கங்களின் முயற்சியோடு இசையமைப்பாளர் கங்கை அமரனை கவுரவிக்கும் வகையில், திரையுலக முன்னணி கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், உலக்கெங்கிலும் இருந்து, பல தமிழ்சங்கங்களைச் சார்ந்த பாடகர்களுடன் இணைந்து மனதை வருடும் பாடல்களோடு இந்நிகழ்ச்சியினை நடத்த உள்ளோம். உங்களின் அன்பான ஒத்துழைப்பினை
வேண்டுகிறோம்.

நன்றி வணக்கம்..
கணேசன் ஹரி நாராயணன்
டோக்கியோ தமிழ் சங்கம்

————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *