சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்திரைப்படங்கள்

பொன்மகள் வந்தாள்- விமர்சனம்


2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது.

போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆதரவாக ஜோதிகா நிற்கிறார். அவருக்கு ஆறுதலாக பாக்கியராஜ் இருக்கிறார்.

ஜோதிகாவை எதிர்க்கும் வழக்கறிஞராக பார்த்திபன், பணக்கார வில்லனாக தியாகராஜன், நீதிபதியாக பிரதாப் போத்தன் அவரின் நண்பர் மற்றும் உதவியாளராக பாண்டியராஜன்..இப்படி படம் நிறைய நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். இதுவே படத்தை நாம் ரசிப்பதற்கான உத்திரவாதத்தைக் கொடுத்து விடுகிறது.

ஜோதிகாவின் நடிப்பில் இப்படம் ஒரு மைல்கல். காரணம் மிகுந்த பொறுப்புணர்வோடு அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு அவ்வளவு நியாயம் சேர்த்துள்ளார். ஏனைய நடிகர்கள் யாருமே துளியும் குறை வைக்கவில்லை.

படத்தின் சோகத்தை வேகத்தை என அனைத்திற்கும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சப்போர்ட் செய்துள்ளன.

பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் கோர்ட்லே தான் நடக்கிறது. இருந்தும் படத்தின் தாக்கம் எங்குமே தேக்கம் கொள்ளவில்லை. பெண் குழந்தைகள் படும் பாலியல் அவஸ்தைகளை அவர்கள் சொல்ல முன் வரவேண்டும். அதைப் பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும் என்ற அறம் சார்ந்த குரலை பொன்மகள் வந்தாள் முழுக்குரலாகப் பேசி இருப்பதால் இப்படம் நிச்சயம் இந்த லாக்டவுன் நாளில் குடும்பத்தோடு காண வேண்டிய படம் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. மேலும் முதன்முதலில் தியேட்டரில் வெளிவரும் முன்பே அமேசான் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட முதல் தமிழ்படம் இதுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *