சினிமா செய்திகள்நடிகைகள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் முதல்வர் எடபாடியாருக்கு கடிதம்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் முதல்வர் எடபாடியாருக்கு ஒரு கடிதாசு எழுதியுள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க பள்ளிகளில் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 40 சதவீத பெண்களுக்கும், 38 சதவீத ஆண் பிள்ளைகளுக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்ததை கண்டறிந்ததாக கூறியுள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் பிள்ளைகளுக்கு இரும்பு சத்து குறைந்திருக்கும் என்று சொல்லி இருக்கார்.

அதுனாலே அரசாங்கம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். காரணம் இரும்புச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதன் மூலம் கொரோனா வர வாய்ப்பு அதிகம் என்பதால் அரசுக்கு இந்த கோரிக்கையை வைச்சிருக்கார்