கொரோனா நிவாரணம் அள்ளி வழங்கிய அஜித்!

“நம்ம கூட இருக்குறவங்களை நம்ம பார்த்துக்கிட்டா நம்மை மேல இருக்குறவன் பார்த்துப்பான் என்பது தல வீரம் படத்தில் சொன்ன டயலாக். படத்தில் சொன்னதை நிஜத்திலும் செய்திருக்கிறார் அஜித்குமார். கொரோனா தொற்றால் நம் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் இந்நேரத்தில் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் சினிமாத் தொழிலார்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பெப்ஸி அமைப்புக்கு 25 லட்சம் வழங்கியுள்ளார். மேலும் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இரண்டிற்கும் தலா இரண்டரை லட்சமும், பி.ஆர் ஓ யூனியனுக்கு இரண்டறை லட்சமும் வழங்கியுள்ளார்.
