College குமார்- விமர்சனம்
படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார்.
எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை மாற்றிக் கொள்வது தான் தேர்ந்த நடிகரின் அடையாளம். பிரபு அதை மிகச்சரியாகச் செய்ருக்கிறார். அவரது மகனாக வரும் ராகுல்விஜய் ஓரளவு நல்ல நடிப்பையே வழங்கியுள்ளார். பிரபு நண்பராக வரும் அவினாஷ், கல்லூரி முதல்வராக வரும் நாசர் உள்பட பலரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு தேவையான பலத்தை அளித்துள்ளன. கல்வி தான் முக்கியம் என்ற கருத்தை விட கல்வி இல்லை என்றால் இங்கு எதுவுமே இல்லை என்பதை நம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்கள் என்பதை படம் சொல்கிறது. முன்பாதியில் சின்னதாக தெரியும் தொய்வு பின்பாதியில் சரி செய்யப்பட்டு அழகாக கவர்கிறது. காமெடியில் அதிக கமர்சியில் கலந்துள்ளதால் இந்தக் காலேஜ்குமார் கலக்கல் குமாராக வலம் வருவார்