சினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தரவரிசைதிரை விமர்சனம்

திரெளபதி- விமர்சனம்

பேசியே ஆக வேண்டிய விசயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசி இருக்கிறது திரெளபதி படம். சாதி ஆணவக்கொலைகள் பற்றி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாடகக்காதல் மற்றும் போலித் திருமணச் சான்றிதழை வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மிரட்டும் கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது படம்.

படத்தில் எந்தக் காட்சியிலும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற விசயங்கள் காட்டப்படவே இல்லை. அந்த விசயத்தில் இயக்குநருக்கு தனிப்பாராட்டுக்கள். நடிகர்களில் ரிச்சர்ட் நாயகனாக மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சிலம்பம் சுற்றும் போதும் சரி, சீறி அடிக்கும் போதும் சரி அழகாக நடித்துள்ளார். நாயகி ஷீலா குறையில்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் தோன்றும் ஏனையக் கதாப்பாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு ஏணியாகத் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் திரெளபதி காஸ்டிங்கிலே பாதி வெற்றியைப் பெற்றுள்ளது.

ஒரு குத்துப்பாட்டில் மசாலாத் தனம் இருந்தாலும் ஒரு காதல் பாடல் எதார்த்தமாக ஈர்க்கிறது. பின்னணி இசையும் தன் பங்கைச் சரியாகச் செய்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம். படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று ஒன்று கூட இல்லை. ஒரு நல்லபடத்திற்கு இது ஒரு நற்சான்று என்றே சொல்ல வேண்டும்.

படத்தில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும் கலை நேர்த்தி அழகாக இருக்கிறது. எந்தச் சாதியையும் வெளிப்படையாக பேசா விட்டாலும் ஈசியாக நம்மால் உணர முடியும் அளவிற்கு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மோகன். கலப்பு திருமணம் போலிக்காதல், போலிப்பதிவு திருமணம் ஆகியவற்றால் உயர்ஜாதி என்று சொல்லப்படுபவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் படம் உரைத்துக் கூறுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதனாலே இப்படியான சமூக அவலங்களைத் தெரிந்துகொள்ள நாம் அவசியம் திரெளபதியைப் பார்க்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *