நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதையை வடிவமைக்கும் வகையில் சென்னையின் முதல் 100% ரெசிடென்ஷியல் கேம்பிரிட்ஜ் பள்ளி ‘சேஜ்ஹில்’!
நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும்.
சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது.
சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது, பள்ளியை விட்டு குழந்தை தள்ளி இருக்கும்போதும் பெற்றோரை குழந்தைகளின் வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி புகைப்படங்கள், வாராந்திர காட்சிப்படுத்தல்கள், மாதந்தோறும் ஆக்டிவிட்டீஸ், பிரதிபலிப்புகள் மற்றும் காலாண்டு கொண்டாட்டங்கள் மூலம் பெற்றோர் அந்த சமயத்தில் இல்லாவிட்டாலும் இந்த நிகழ்வுகள் மூலம் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்த அமைப்பு ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்படாமல், பள்ளியின் அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கல்விக்கு அடிப்படையான நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது.
முழுமையான ரெசிடென்ஷியல் பள்ளியாக மட்டுமல்லாமல், அதற்கும் அப்பாற்பட்ட வீடு- பள்ளி சூழலை ‘சேஜ்ஹில்’ வழங்குகிறது. அங்கு குழந்தைகள் சுதந்திரம், அக்கறை, நம்பிக்கை, மற்றும் பொறுப்பையும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால் வழிநடத்தப்படும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் உறவுகள், படைப்பாற்றல் மற்றும் நேர்மறையான சூழலில் வளர்கிறார்கள்.
நீலகேசவ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையால் ஆதரிக்கப்பட்டு, ஸ்ரீமதி நீலம்மாள் மற்றும் ஸ்ரீ கேசவலு நாயுடு ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் ’சேஜ்ஹில்’ கல்வி, குணநலன் மற்றும் சேவை ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்பங்களுக்கும் நவீன பெற்றோர்களுக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிகளின் இணக்கம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகளின் ஆர்வத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் ஒரு பள்ளியாக இது செயல்படும். ஒவ்வொரு குழந்தையும் தெளிவு, சமநிலை மற்றும் தைரியத்துடன் வளரும் ரெசிடென்ஷியல் பள்ளிதான் ‘சேஜ்ஹில்’.

