திரை விமர்சனம்

ஆட்டோகிராப் – திரை விமர்சனம்

மழை பெய்ததும் குபீ ரென வெளிப்படுமே ஒருவித மண் வாசனை… அந்த வாசனை நாசி வரை போய் மனதை நிறைக்குமே… அப்படி ஒரு சுகானுபவம் தான் இந்த ஆட்டோகிராப். தோல்வி என்று தெரியாமலே தோற்றுப் போன பள்ளிக் காதல்… காதல் கைகூடி வந்தநேரத்தில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு அவமானத்தில் முடிந்த கல்லூரிக் காதல்…
இந்த சோகத்துக்கு நடுவே ஒரு சுகராகமாக வந்து சேர்கிறாள் ஒரு சினேகிதி. காதல் வலியில்
திணறிக் கொண்டிருந்த அவனுக்குள் தனது நட்பால் புது வெளிச்சம் பாய்ச்சு கிறாள் இந்த சினேகிதி.
இப்போது சினேகிதி அவனுக்கு ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்து அவன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகிறாள்.
இப்போது நாயகனுக்கு திருமணம். பெண் பார்த்ததே இந்த சினேகிதி தான்.
திருமணத்துக்கு தன் முன்னாள் காதலிகளை அழைக்க விரும்புகிறான் நாயகன்.
அவர்கள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள்? இந்த புதிய சந்திப்பு அவர்களுக்குள் ஏற்படுத்திய உணர்வு கள் எப்படி இருந்தன? அவர்கள் கல்யாணத்துக்கு வந்தார்களா என்பதே ஆட்டோகிராப்.

காதலை இத்தனை வலியும் சோகமு மாய் சொன்ன விதத்தில் மனதில் தனித்து நிற்கிறது
படம். வெளியாகி 21 ஆண்டுகளுக்கு பிறகும் பார்வையாளர்களுக்குள் இப்போதும் அதே உணர்வை கடத்துகிறது என்பது இந்த ஆட்டோகிராபின் தனிச்சிறப்பு. இயக்குனர் சேரனுக்கான பெரும் சிறப்பு.
கதை இதுதான்.
சேரன் பள்ளிப் பருவத்தில் மல்லிகா மீதுள்ள காதலையும் கல்லூரிப் பருவத்தில் கோபிகா மீது ஏற்படும் காதலையும் கடக்கிறார். அறியாப் பருவ பள்ளிக் காதல், அது காதல் என்று தெரியும் முன்னே முடிந்து போகிறது. கல்லூரிக் காதலில் எல்லாம் கைகூடி வரும் நேரத்தில் தலையில் விழுந்த இடியாய் அது முற்றுப் பெறுகிறது.
தன் காதல் தோல்விகளுக்கு மருந்தாக நல்ல தோழியாக சேரனின் வாழ்வில் வருகிறார் சினேகா. இந்த நட்பு அவரை வாழ்வின் சிகரம் ஏற்றி அழகு பார்க்கிறது. சினேகிதி தயவில் வாழ்வில் முன்னேற்றம். அப்படியே கனிகாவுடன் திருமணமும் நிச்சயமாகிறது.
திருமணத்திற்கு தான் காதலித்த பெண்கள், பள்ளிக்கால நண்பர்கள் வந்து வாழ்த்துவதை மிக எதார்த்தமாக சொல்லியிருப்பதே படத்தின் சுவாராஸ்யமான திரைக்கதை.

கதாநாயகனாக சேரன் நடித்நிருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகிகளாக சினேகா, கோபிகா, மல்விகா, கனிகா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள். ராஜேஷ், இளவரசு, பெஞ்சமின், உமாபதி, வேல்முருகன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் பாத்திரமாகவே மாறிப்போன
விந்தையும் இந்த
படத்தில் நடந்தது.
கல்லூரிக் கால காதலி கோபிகாவுக்கு திருமண பத்திரிகையை கொடுக்க சேரன் வரும் காட்சி நெகிழ்வின் உச்சம்.
ஒளிப்பதிவு படத்திற்குபெரிய பலமானது போல் பரத்வாஜின் இசையும் சபேஷ் முரளியின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குநர் சேரன் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காதல், நட்பை பிரதிபலிக்கும் கதையை மனம் கன க்கும் விதத்தில் சொல்லி ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த படம் இது. 21 ஆண்டுகளுக்கு பின்பும் பசுமை மாறாத காதல் இன்றைய தலைமுறைக்கும் சென்று சேரும் என்பது நிச்சயம். மறக்க முடியாத காதல் நினைவுகள் பலருக்குள் மறுபடியும் கிளறி விடப்பட்டிருக்கிறது.
இது சேரன் கட்டமைத்த சாம்ராஜ்யம். இன்னும் அதே கம்பீரமாய்.

அழகாக சொல்லி அன்றே வெற்றி படமாக கொடுத்ததை மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார்.

பார்த்தவர்கள் மீண்டும் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம்.