ராம் அப்துல்லா ஆன்டனி — திரை விமர்சனம்
இளம் சிறார்களின் தடம் மாறிப் போன வாழ்க்கை.
ராம் அப்துல்லா ஆண்டனி மூவரும் ஒரே
பள்ளி மாணவர்கள். நண்பர்கள். மதங்களை தாண்டிய நட்பு இவர்களுடையது,. ஒரு நாள் மூன்று நண்பர்களும் ஒன்றிணைந்து தொழிலதிபர் வேல. ராமமூர்த்தியின் பேரனை கடத்தி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சாக்கு மூட்டையில் போட்டு விடுகின்றனர்.
இதனை போலீசாக வரும் சௌந்தரராஜன் கண்டுபிடிக்கிறார். கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கொலைக்கு பின்னான அதிர்ச்சி தகவல் தெரிய வர, சட்டம் தன் கடமையை செய்கிறது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கொலை செய்யும் அளவுக்கு ஏன் போனார்கள் என்பது கிளைமாக்ஸ் வரையிலான
மீதிக்கதை.
நண்பர்களாக பூவையார், அர்ஜூன், அஜய் அர்னால் வருகிறார்கள். தலைவாசல் விஜய், சௌந்தரராஜன் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக காட்சிகளில் நிறைந்து நிற்கிறார்கள்.
ஜெயவேல் எழுதி இயக்கி இருக்கிறார்.
படத்தின் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
கதையில் சுவாரஸ்யம் இருந்தாலும் மிகவும் சாதாரணமான காட்சிகளாக நகர்வது பலவீனம். தலைப்பைப் பார்த்ததும் மத நல்லிணக்கத்துக்கு ஏதோ செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால், ஊஹூம்.
