மறு வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம்.
பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.
எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகள். “சொட்ட சொட்ட நனையுது” படத்தை திரையரங்கில் பார்த்து, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நீங்கள் பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
புதிய வெளியீட்டு தேதி : ஆகஸ்ட் 29
உங்களின் புரிதலுக்கும், தொடர்ந்து தரும் உற்சாக ஆதரவுக்கும் நன்றி. மேலும் பல அப்டேட்களுடன் விரைவில் சந்திப்போம்!
– சொட்ட சொட்ட நனையுது
படக்குழு
