சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – திரை விமர்சனம்
ரவுடி லிவிங்ஸ்டனிடம் விசுவாசமிக்க அடியாட்களாக இருப்பவர்கள் வைபவ், மணிகண்ட ராஜேஷ். லிவிங்ஸ்டனின் தொழில் குருவான ஷிகான் உசைனி தனது வீட்டில் ஒரு போலி திருட்டை நடத்த லிவிங்ஸ் டனை கேட்டுக்கொள்ள, அவரும் தனது விசுவாச அடியாட் களை அனுப்புகிறார். இன்சூரன்ஸ் மூலம் அந்த பணத்தை பெற்ற பிறகு கொள்ளையடித்த பணத்தை திருப்பி தந்து விட வேண்டும் என்பது வைபவ் அண்ட் கோவுக்கான அசைன்மென்ட். திட்டப்படி இரண்டு கோடியை கொள்ளையடித்து விடும் வைபவ்வும் மணிகண்டனும் டாஸ்மாக்கில் பணத்தை தொலைத்து விடுகிறார்கள். இதனால் விட்ட பணத்தை மீட்க வங்கி கொள்ளை ஒன்றுக்கு திட்டமிட்ட நிலையில் இருக்கும் ஆனந்தராஜ் கோஷ்டியில் இணைகிறார்கள். பூமிக்கடியில் பள்ளம் தோண்டி வங்கியை அடைந்த நிலையில் வங்கியை கொள்ளை அடிக்க முடிந்ததா? என்பதை முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள்.
சிட்டி கேங்ஸ்டர்ஸ் காமெடி கதாபாத்திரத்திரங்களை சர்வசாதாரணமாக கையாளும் வைபவ், இதிலும் அப்படியே செய்கிறார். அவர் சாதாரணமாக பேசும் இடங்களில் கூட நகைச்சுவை கைகோர்த்து கொள்கிறது. இரண்டாவது நாயகனாக வரும் மணிகண்ட ராஜேஷ், காமெடி நடிப்பில் இன்னும் தேற வேண்டும்.
ஆனந்த ராஜின் கொள்ளைக் கூட்டணியில் மறதி மொட்டை ராஜேந்திரன், மதுப் பிரியர் சுனில், காது கேளாத, ஜான் விஜய் என்ன வித்தியாசமாக கேரக்டர்களை வடிவமைத்திருக்கிறார்கள். இவர்களில் சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ் கேரக்டர் முதலிடம் பிடிக்கிறது. லிவிங்ஸ்டன், சிஹான் ஹூசைனி என அனைவரும் வழக்கம் போல் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள், நாயகியாக வரும் அதுல்யா தான் பாவம். தனது கேரக்டர் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளாமல் கடைசி வரை அந்த கேரக்டருக்கு தூரமாகவே இருக்கிறார். அவரை காதலிக்கிறார் என்பதை கூட மொட்டை ராஜேந்திரனால் கடத்தப்பட்ட நிலையில் அங்கு வந்து சேரும் சூர்யா சொன்ன பிறகே கொஞ்சமாய் வெட்கப்படுகிறார்.டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசையிலும் அவரது மெனக்கடல் தனித்து தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் டிஜோ டாமியின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக கண்களில் நிறைக்கிறது.விக்ரம் ராஜேஸ்வர்- அருண் கேசவ் இய க்கி இருக்கிறார்கள் பழைய கதையை காமெடியாக சொல்ல முயற்சித்து அரைக் கிணறு தாண்டி இருக்கிறார்கள்.
