அமீர்க்கு பேரரசு பதிலடி!
அரசியலில் ஆன்மீகம் கூடாது என்று
அரசியலில்வாதியோடு நின்று கூவுகிறீர்கள் அமீர்!
உங்களுக்கு ஆன்மீகம் பிரச்சனை இல்லை,
இந்து மதம் தான் பிரச்சனை!
ஓட்டுக்காக உங்களை சிறுபான்மையினர்! சிறுபான்மையினர் என்று கூவுகிறார்களே அவர்கள் உங்களுக்கு அரசியல்வாதியாக தெரியவில்லையா?
இந்து மதத்துக்குள் இருந்து கொண்டு இந்துக் கடவுளை விமர்சிப்பவன் நாத்திகவாதியாக அறியப்படுவான்!
கடவுள் நம்பிக்கையோடு ஒரு மதத்தில் இருந்து கொண்டு இன்னொரு மதத்தில் மூக்கை நுழைப்பவன் மதவாதியாகதான் கருதப்படுவான்!
ஒரு காலத்தில் கொள்கையாக இருந்த நாத்திகம் இன்று அரசியல் ஆகிவிட்டது.
அரசியல்வாதியாக இருந்து கொண்டு நாத்திகம் பேசுவார்களை பார்த்து
அரசியலில் நாத்திகம் பேசாதே என்று உங்களால் கூற முடியுமா?
ரம்ஜானுக்கும் கிறிஸ்மஸுக்கும் அந்தந்த ஆலயங்களுக்கு சென்று வேஷம் போடும் அரசியல்வாதிகள், இந்து பண்டிகைகளை புறம் தள்ளுகிறார்களே அவர்களுக்கு எதிராக உங்களால் குரல் கொடுக்க முடியுமா?
கோவிலுக்குள் வந்த சில அரசியல்வாதிகள் நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்துவிட்டு மசூதிக்குள் வந்து குல்லா போடுகிறார்களே அவர்களிடம் எல்லா மதத்தையும் ஒன்றாக பாருங்கள், அரசியல் செய்யாதீர்கள் என்று உங்களால் கூற முடியுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் “நான் கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறுகிறாரே!
அவரிடம் மதத்தை ஏன் அரசியல் ஆக்குகிறீர்கள் என்று கேட்க முடியுமா?
அரசியல்வாதிகள்தான் ஓட்டுக்காக இந்து எதிர்ப்பு நாடகம் ஆடுகிறார்கள் என்றால்
உங்களுக்கு என்ன பிரச்சனை?
நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் தலையிடுகிறீர்கள்?
இந்து எதிர்ப்பை அரசியல் ஆக்கினால், இந்து ஆதரவும் அரசியலாக்கத்தான்படும்!
உங்கள் மதத்தில் நிறை குறை இருந்தால் அதை பற்றி பேசுங்கள் !அடுத்த மதத்திற்குள் அறிவுரை கூற வேண்டாம்!
இது உங்களுக்கு தேவை இல்லாதது!
வெற்றிவேல்! வீரவேல்!
—இயக்குனர் பேரரசு

