திரை விமர்சனம்

முஃபாஸா தி லயன் கிங் – திரை விமர்சனம்

2019 ஆம் ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த வெற்றியை குறிவைத்து வெளியாகி இருக்கும் படம், ‘முபாசா தி லயன் கிங்.’ பபூன் குரங்கான ரபீக் சிம்பாவின் மகளிடம் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் தொடங்குகிறது.

சிறுவயதில் தங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒபாசா வேறொரு சிங்கஆளுகை இருக்கும் காட்டுக்குள் வந்து சேர்கிறது. ஆனால் அந்த சிங்கக் கூட்டத்தின் தலைவனான முபாசி, இடம் பெயர்ந்து வந்த இந்த குட்டி சிங்கத்தை ஏற்க மறுக்கிறது. இதற்குள் முபாசியின் மகன் டாக்காவின் அன்பை பெற்று விட்ட படியால் பெண் சிங்கங்கள் கூட்டத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைக்கிறது.

இந்நிலையில் எதிர்பாராமல் நடந்த ஒரு சண்டையில் வெள்ளை நிற சிங்கக் கூட்டத்தை சேர்ந்த ஒரு குட்டி சிங்கத்தை முபாசா கொன்று விட, இதனால் முபாசாவை கொன்று விட துடிக்கும் வெள்ளை நிற சிங்க கூட்டம் முபாசாவையும் டாக்காவையும் வெறியுடன் துரத்துகின்றன. ஆனாலும் நண்பர்கள் இருவரும் தப்பி விடுகின்றனர்.

இப்போது தன் தாய் கூறிய மில்லேலே என்ற இடத்தை தேடி நண்பன் மற்றும் புதிய நண்பர்களுடன் பயணப்படுகிறது முபாசா. இந்நிலையில் துணையாக வந்த ஒரு பெண் சிங்கம் ஒன்றின் மீது டாக்கா காதல் வயப்பட, அந்தப் பெண் சிங்கமோ முபாசா மீது காதல் கொள்கிறது.

முபாசாவும் வேறு வழியின்றி அந்த காதலை ஏற்றுக் கொள்கிறது.
இது தெரிய வந்ததும் டாக்கா, முபாசாவை பழி வாங்க துடிக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் தானே. இதனால் முபாசாவின் எதிரியானவெள்ளை சிங்க ராஜாவை சந்தித்து, உங்கள் வாரிசை கொன்ற ஒபாசா சிங்கத்தை தந்திரமாக உங்கள் வசம் ஒப்படைக்க வேண்டியது எனது பொறுப்பு என்கிறது.

நண்பனின் நட்பு துரோகமான நிலையில் முபாசா சிங்கம் என்ன முடிவெடுக்கிறது? அது வெள்ளை சிங்க கூட்டத்திடம் இருந்து உயிர் தப்பியதா?

தனது லட்சிய பயணமான மில்லாலே சொர்க்க பூமியை அடைந்ததா? தன் பெற்றோருடன் மீண்டும் இணைந்ததா? என்பதை சுவாரஸ்ய முடிச்சுகளுடன் தந்திருக்கிறது படம்.

தமிழில் கதாபாத்திரங்களுக்கு தமிழ் நட்சத்திரங்களே குரல் கொடுத்தது சிறப்பு. குறிப்பாக அர்ஜுன் தாஸ், நாசர், அசோக் செல்வன், சிங்கம் புலி, வி.டி.வி. கணேஷ், ரோபோ சங்கர் தங்கள் டப்பிங் மூலம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாக்கி விடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் இடம் பெறும் ஆற்று வெள்ளம் தொடங்கி கிளைமாக்சில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் வரை கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டுகின்றன. அவற்றை விறு விறுப்பு குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
முபாசா, சிறார்களின் குதூகல கொண்டாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *