தேவரா விமர்சனம்.. கடல் கொள்ளை
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சையப் அலி கான், பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ படம் பான் இந்தியா வெளியீடு..
கதை…
நம் நாட்டிற்கு சட்ட விரோதமாக வரும் ஆயுதங்களை தொழில் அதிபர் கட்டளைக்காக செங்கடலுக்கே சென்று கொள்ளையடித்து கொடுப்பது ஜூனியர் என்டிஆர் இன் தொழில்.. இவருக்கு உடந்தையாக சைப் அலிகான் கலையரசன் உள்ளிட்ட நண்பர்கள் உண்டு.
ஒரு கட்டத்தில் இவர்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கடற்படை அதிகாரி நரேன்.. நீங்கள் நாட்டிற்கு துரோகம் செய்கிறீர்கள் என சொல்கிறார்.
இதனையடுத்து என்டிஆர் திருந்துகிறார்.. ஆனால் இவரது நண்பர்களோ எங்களது தொழில் இதுதான்.. நாங்கள் விட முடியாது என பிரச்சனை செய்யவே மோதல் வெடிக்கிறது.
அதன் பிறகு என்ன நடந்தது? நாட்டிற்கு துரோகம் செய்த நண்பர்களை இவர் தீர்த்து கட்டினாரா? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்…
ஆக்சன் சென்டிமென்ட் டான்ஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார் ஜூனியர் என்டிஆர்.. தேவரா & வரா என்ற தந்தை மகன் என இரு கேரக்டர்கள் இருந்தாலும் இரண்டிலும் மாற்றம் இல்லை.. தன் ரசிகர்களுக்கு ஏற்ற ஆக்சன் விருந்தை படம் முழுக்க கொடுத்து தாங்கி இருக்கிறார் இந்த தேவரா..
இடைவேளைக்குப் பிறகுதான் நாயகி ஜான்வி கபூர் வருகிறார்.. அதுவும் சில காட்சிகள் வந்து பாட்டு பாடி சென்று விடுகிறார்.. இவரது தோழிகளும் ரசிக்க வைக்கிறார்கள்.. அதுபோல தோழிகளுடன் இவர்கள் பேசும் காட்சி பெண்களுக்கே உரித்தான நகைச்சுவை.
சைய்ப் அலி கான், ஸ்ரீகாந்த் கலையரசன் உள்ளிட்ட குரூப்புகள் ரசிக்க வைக்கிறது.. இவர்கள் மோதும் பைட் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து..
துணை கதாபாத்திரங்களாக பிராகாஷ்ராஜ், முரளிஷர்மா, ஆகியோர் குறையில்லாத நடிப்பில் கவர்கின்றனர்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாஸ்கோ மார்ட்டீஸ் என்பவர் நடன காட்சிகளை அமைத்திருக்கிறார்.. ஒவ்வொன்றும் ஆட்டம் போடும் விதமாக அமைந்திருப்பது கூடுதல் பிளஸ்.. கென்னி சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார் ஒவ்வொன்றும் அனல் தெறிக்கும் ரகம்.
ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. இருவரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.. செங்கடல் காட்சிகள் அனைத்தும் அவ்வளவு அழகு.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தருகிறது..
ஆடை வடிவமைப்பு முதல் கலைப் பொருட்கள் வடிவமைப்பு செங்கடல் காட்சிகள் ஒவ்வொன்றும் கலை இயக்குனர் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.. அதுபோல கிராபிக்ஸ் காட்சிகளும் கவர்கின்றன.. இடைவேளை சண்டைக் காட்சியில் பிறைநிலாவும் ரத்தமும் இணைந்து வட்டமாகும் காட்சி பாராட்டுகுரியது..
ஜூனியர் என்டிஆர் க்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகளை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.. அது ஓவர் டோஸ் ஆக இருப்பது சிலருக்கு போர் அடிக்கலாம்.
டைரக்டருக்கு உறுதுணையாக இருந்து இசையில் மிரட்டி இருக்கிறார் நம்ம ராக்ஸ்டார் அனிருத்.. டைட்டில் கார்டு முதல் எண்டு கார்டு வரை இசை சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார்..
வெறுமனே ஆக்சன் மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் காட்சிகளையும் குடும்பத்திற்கு ஏற்ற சென்ட் சென்டிமென்ட் காட்சிகளையும் சமூக சிந்தனை காட்சிகளையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கொரட்டலா சிவா.
கடலில் கொள்ளை அடிக்கும் சீன் இந்திய சினிமாவில் பார்த்திராத காட்சியாகும்.. நரேன் சொல்லும் அட்வைஸ் ரசிக்க வைக்கிறது.. அதுபோல ஜூனியர் என்டிஆர் அறிமுகமாகும் காட்சிகளும் அவரது மகன் வரா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது..
தேவரா படத்தின் முதல் பாகம் முடிவில் வரும் திருப்புமுனை காட்சி பாகுபலியை நினைவுப் படுத்துகிறது.
ஆக தேவரா… கடல் கொள்ளை
——–