கடைசி உலகப்போர்- திரை விமர்சனம்
இதுவரை நட்பு ரொமான்ஸ் என பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ஹிப் ஹாப் ஆதி… இந்த முறை நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் என ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷனில் இறங்கி வித்தியாசமான ஒரு படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.
கதை…
2028 ல் நடக்கும் கதையை வடிவமைத்திருக்கிறார்.. ஐ நா சபைக்கு போட்டியாக ரிபப்ளிக் என்ற அமைப்பு உருவாகுகிறது.. அதில் இணைந்து கொள்ள இந்தியா மறுக்கும் போது அத்துமீறி இந்தியர்களை கைக்குள் கொண்டு வருகிறது அந்த அமைப்பு.. அப்போது மோதல் போர் வெடிக்கிறது.. அதன் பிறகு என்ன நடந்தது.? ஆதியின் பங்கு என்ன என்பதுதான் மீதிக்கதை..
நடிகர்கள்…
படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி என்றாலும் படம் முழுக்க வருவதும் வாய்ஸ் ஓவரில் பேசுவதும் நட்டி நடராஜ் தான்.. முதலமைச்சரின் மச்சானாக வந்து கிங்மேக்கர் ஆக இவர் போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பலே பலே ரகம்.. வாய்ஸ் ஓரில் பேசும் போது கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசி இருக்கலாம்..
நாயகியாக அனகா.. இவர்தான் முதலமைச்சரின் மகளாகவும் கல்வித்துறை அமைச்சராகம் வருகிறார்.. கவர்ச்சி ஒரு துளியும் இல்லாமல் சேலை கட்டி பெண் அமைச்சருக்கான அழகை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சராக நாசர்.. வழக்கம் போல தன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.. புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் அழகம்பெருமாள்.. இவர் சீமானை கிண்டல் அடிக்கும் கேரக்டர் போலவே அமைந்திருக்கிறது..
சினிமா நடிகராக ஷாரா.. பல இடங்களில் ஓவர் ஆக்டிவ் செய்து சோதிக்கிறார்..
முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் உண்டு என சொல்லிக் கொள்ளலாம்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. இவரது ஒளிப்பதிவும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.. திரைக்கதை குழப்பமாக இருந்தாலும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தரத்தை உயர்த்தி காட்டி இருக்கிறது..
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ இருவரது பணியும் சிறப்பு..
கதை எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி வித்தியாசமான முயற்சி என்ற பெயரில் தெளிவில்லாத திரைக்கதையை கொடுத்து தனக்கு ஆபத்தை வர வைத்திருக்கிறார்.
ஐநா சபைக்கு மாற்றாக ரிபப்ளிக் அமைப்பு என்று வித்தியாசமான கதை சொல்லி 2028 ல் நடக்கும் கதைகளும் என முற்போக்கு சிந்தித்த அவர் திரைக்கதையை கோட்டை விட்டு உள்ளார் வளமான திறமையான நடிகர்கள் பலர் இருந்தும் அவர்கள் பணி வீணாகி இருக்கிறது..
ஹிப்ஹாப் ஆதிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.. அவர்கள் எதிர்பார்த்து வந்த கதை இல்லாத போது நிச்சயம் ஏமாற்றமே..