பிரேமலு Premalu விமர்சனம் 4.25/5

தமிழ் ரசிகர்களையும் வியக்க வைக்க வந்துள்ள மலையாள படம் ‘பிரேமலு’. இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.
நாயகன் Naslen (சச்சின்) தனது நண்பர்களுடன் சேலத்தில் வசித்து வருகிறார்.. அங்குள்ள கல்லூரியில் பயிலும் மாணவி அஞ்சலியை காதலிக்கிறார்.. ஆனால் அஞ்சலி நாயகன் சச்சினின் காதலை மறுத்து விடுகிறார்.
ஒரு பக்கம் காதல் தோல்வி மறுபக்கம் படித்து விட்டு வேலை கிடைக்காத நிலையில் விரக்தியில் இருக்கிறார் நாயகன். இந்த நிலையில் தான் மற்றொரு நண்பன் அமல் உதவியுடன் ஹைதராபாத் சென்று அங்கே GATE கோச்சிங் பயிற்சி வகுப்பில் சேர்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் இவர்களின் நண்பரின் கல்யாணத்திற்காக செல்கின்றனர்.. அங்கே நாயகி ரீனு (mamitha) தனது ஐடி நிறுவன ஊழியர்களுடன் பெண் தோழியாக வருகிறார்.
நாயகியை பார்த்த சில நிமிடங்களிலேயே அவர் மீது காதல் கொள்கிறார் நாயகன். ஆனால் நாயகி கேரக்டரோ இவருக்கு ஒத்து வராத கேரக்டர்.

இந்த சூழ்நிலையில் காதல் என்ன ஆனது.? இரண்டாவது காதலாவது கை கூடியதா?நாயகன் என்னெல்லாம் முயற்சி செய்தார்.? நாயகி ஒத்துக் கொண்டாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
நஸ்லென் மற்றும் மமிதா பைஜு யதார்த்தமான நடிப்பில் நம்மை ஒவ்வொரு நிமிடமும் கவர்கின்றனர்..
உருக உருக காதலிப்பது என்று இல்லாமல் எதார்த்தமாக காதலிப்பது என்பதுதான் இந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.. நாயகனின் காதலை வெறுக்கும் நாயகி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவது அவரது முகபாவனைகளில் அப்பட்டாம தெரிகிறது அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் மமிதா பைஜூ.
சச்சினாக நடித்திருக்கும் நாயகன் நஸ்லன் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.. தண்ணி போட்டு விட்டு அவர் செய்யும் கலாட்டா முதல் காதல் தோல்வி.. வேலையில்லா பிரச்சனை என அனைத்தையும் உள்வாங்கி ஒரு யதார்த்த இளைஞனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
ஐடி ஊழியர் ஆதி.. கார்த்திகா.. நாயகனின் நண்பன் அமல் டேவிஸ் என அனைவரும் நம் மனதை விட்டு நீங்க மறுக்கின்றனர்.. நாமும் அவர்களும் இணைந்து ஒரு அழகான சுற்றுலா சென்ற உணவை தருகிறது இந்த படம்..
கிரிஷ் ஏடி இயக்கியிருக்கிறார்.. இன்றைய காதலை எவ்வளவு எதார்த்தமாக சொல்ல முடியுமோ அந்த வகையில் ரசிகர்களுக்கு காதல் விருந்து படைத்திருக்கிறார். திரைக்கதையிலும் வசனத்திலும் நிறைய மெனக்கெட்டு அதற்கான காட்சிகளை அமைத்திருப்பது ரசிகர்களின் பாராட்டை நிச்சயம் பெறும்..
தமிழில் டப்பிங் செய்யப்பட்ட வசனங்கள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் சிரிக்க வைக்கிறது ரசிக்க வைக்கிறது சிந்திக்க வைக்கிறது.. ஒரு நகைச்சுவை முடிவதற்குள் அடுத்த நகைச்சுவை வந்து என்னை நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது..
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் வேற லெவல் ரகம்.. கிளைமாக்ஸ் காட்சிகள் கூட ஆக்ஷன் எதுவும் வைக்காமல் அடியாட்கள் எங்களுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லுவதெல்லாம் வேற லெவல் கற்பனை..
இது காதலர்களுக்கான படம் மட்டுமில்லை.. அனைத்து தரப்பும் ரசிக்கும்படியாக ஒவ்வொரு காட்சிகளையும் எந்த ஆபாசமும் வன்முறையும் இல்லாமல் அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏடி.

