GAAMI காமி விமர்சனம்

Gaami என்றால் Seeker என்று பொருள்..
வித்யாதர் காகிதா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் நடிப்பில் உருவான அட்வென்சர் த்ரில்லர் தான் இந்த `காமி’ (Gaami).
ஷங்கர் (விஸ்வக் சென்) அகோரியாக வாழ்ந்து வருகிறார்.. இவருக்கு மிகவும் அரிதான ஹாபிடோபியா எனும் மனித தொடுகை ஒவ்வாமை பாதிப்பு இருக்கிறது
எனவே இமயமலை பிரதேசத்தில் துரோனகிரி எனும் பகுதியில் 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிதாக பூக்கும் ஒளிரும் காளானை கண்டறிந்து கைப்பற்றினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள்..
அதன்படி பெண் மருத்துவர் உதவியுடன் இருவரும் இமயமலைக்கு செல்கின்றனர்.
இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொரு இரண்டு கிளை கதைகள் உள்ளன..
ஒரு கிராமத்தில் தேவதாசியாக வாழ்கிறார் அபிநயா. இவருக்கு ஒரு மகள்.. அந்த கிராமத்தின் நடைமுறைப்படி தேவதாசியின் மகளும் இதே தேவதாசி தொழிலுக்கு வரவேண்டும் என்கின்றனர். ஆனால் தன் மகளைக் காப்பாற்ற போராடுகிறார் அபிநயா.. மகளும் தப்பி ஓடுகிறாள்.
சிறையில் ஒரு இளைஞன் அடைக்கப்படுகிறான். அங்கிருந்து தப்பிக்க ‘Shawshank Redemption’ பாணியில் பல முயற்சி எடுக்கிறான்.
இந்த மூன்று கதைகளும் எப்படி இணைக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
நடிகர் விஸ்வக் சென்.. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்தி திறமையை நிரூபித்திருக்கிறார்.. இவரது கேரக்டர் வலுவாக அமைக்கப்பட்டிருக்கிறது..
இமயமலை செல்லும் சாந்தினி செளத்ரி ரசிக்க வைத்தாலும் சில லாஜிக் மீறல்கள் உள்ளது.. மலை பனிக்கட்டியில் தவறி விழும் அவரது முகத்தில் எந்தவிதமான கீறலோ எதுவும் இல்லை.. அதுபோல உறைந்து கிடக்கும் பணியில் அவர் கையுறை கூட அணியாமல் இருப்பது ஏனோ.?
அழகும் திறமையை நிறைந்த அபிநயாவின் கேரக்டர் கண்கலங்க வைக்கும்.. தேவதாசி வேடம் என்றாலும் தேவதையாக தெரிகிறார்..
உமா என்ற சிறுமியின் மருத்துவ ரீதியான குறைபாடு.. வித்தியாசமான ஒன்றாகும் அதன் மூலம் தான் இந்த கதைக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.. இதன் மூலமாக நாயகன் கேரக்டரில் தீர்வு கிடைக்கிறது..
CT -333 என்ற கேரக்டரில் நடித்த மொஹமத் சமத் மனதில் பதிக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. நம்மை இமயமலைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்..
இசையமைப்பாளரின் நரேஷ் குமரனின் பின்னணி இசை கச்சிதம். ஸ்வீகர் அகஸ்தியின் பாடல்கள் சிறப்பு..
ஜெயில் கதையில் என்ன வகை ஆராய்ச்சி என்பது புரியவில்லை.. இந்தக் காட்சி தொடர்ந்து இருக்கும் வேலையில் அதற்கான விளக்கம் அளித்து இருந்தால் கூடுதல் சுவாரசியம் பெற்று இருக்கும்.
படத்தின் எடிட்டர் தான் வித்தியாசம் என்ற பெயரில் இரண்டு கதைகளையும் இணைக்கும் போது நம்மை நோகடிக்கிறார்.. முக்கியமாக ஒரு கதை வேகமாக பயணிக்கிறது.. அடுத்த கதை ஆமை வேகத்தில் நகர்கிறது.. இரண்டையும் இணைக்கும் போது நமது ஆர்வத்தில் தொய்வு ஏற்படுகிறது..
இந்த மூன்று கதைகளும் எதை நோக்கி பயணிக்கிறது.. இதன் முடிவு தான் என்ன.? என ரசிகர்கள் குழம்பி இருக்கும் வேளையில் கிளைமாக்ஸில் அதற்கான விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
க்ளைமாக்ஸில் தெரியவரும் ட்விஸ்ட் ரசிகர்களின் அப்ளாஸை அள்ளும்.

