திரை விமர்சனம்திரைப்படங்கள்

கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்..

குடி குடி குடி.. குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதைதான் இந்த கிளாஸ்மேட்ஸ்.

நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவணா சக்தியும் எப்போதும் குடி குடி என்றே இருக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழித்து அடுத்தவர்களையும் கெடுப்பது தான் இந்த படத்தின் மூலக்கதை.

தயாரிப்பாளரே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. அவர்தான் அங்கையற்கண்ணன். குடிப்பதற்காகவே படம் எடுத்து கடைசியில் அட்வைஸ் செய்கிறார் இந்த நாயகன்.

இவரின் மாமாவாக இயக்குனர் சரவணசக்தி. அவருக்கும் ஏற்ற வேடம்தான். இருவரும் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் அலைவதும் இவர்களின் மனைவிகள் கட்டுக்கோப்பாக இருந்து வேலைக்கு செல்வதும் என நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட குடிகாரர்களின் மனைவிமார்கள் இவ்வளவு அன்பாக இருப்பார்கள் என்ன.? மாமா.. மாமா.. என்று பாச மழை பொழிகிறார்கள்..

பெரும்பாலும் குடிகாரர்கள் வேடத்தில் நடிகர் மயில்சாமியை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் நல்லவராக இருக்கிறார்.

கதைப்படி ஒரு காலத்தில் குடிகாரராக இருந்தாராம்.. திருந்திய பிறகு கொஞ்சம் அட்வைஸ் செய்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் இவரே குடிகாரனாக மாறிவிடுகிறார்.

‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்ற தத்துவம் பேசி செல்கிறார்.

டாக்டராக டி எம் கார்த்திக் நடித்திருக்கிறார். நல்ல மருத்துவராக இருந்த இவரையும் குடிகாரனாக மாற்றி விடுகிறார்கள் கதையின் நாயகர்கள்.. அதுபோலவே அமெரிக்க மாப்பிள்ளையாக சாம்ஸ்.. இவரும் ஒரு கட்டத்தில் குடிகாரனாக மாறிவிடுகிறார்.. இவர் வரும் நேரத்தில் சிரிப்பலையை தியேட்டரில் கேட்க முடிகிறது.

அயலி அபிநட்சத்திர கொஞ்ச நேரம் என்றாலும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.. இவரின் கிளைமாக்ஸ் முடிவு எதிர்பாராத ஒன்று.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

நாயகனுக்கு மனைவியாக பிரணா.. கணவன் குடித்துவிட்டு வந்தாலும் அடித்தாலும் எதையும் கேட்காத அப்பாவி மனைவியாக நடித்திருக்கிறார்..

சரவணசக்திக்கு மனைவியாக நடித்தவரும் நல்ல இளமையுடன் வசீகரமாக வருகிறார்.

வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் குடிகாரர்களுக்கு தேசிய கீதமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை..

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியவை.

இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.

படம் முழுவதும் சரக்கு சரக்கு என்பதால் சரக்கு அடித்து விட்டு போட்ட ஆட்டங்கள் தாளங்கள் ஏராளம்.. அதற்கு ஏற்ப ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இயக்குனர் மற்றும் நாயகன்.

தானும் சரக்கு அடித்து விட்டு தன் நண்பர்களையும் சரக்கடிக்க செய்துவிட்டு குடும்பத்தையும் ஊரையும் கெடுத்து சீரழிப்பது தான் இந்த கிளாஸ் மேட்ஸ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *