ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாவது பாடல் ‘மோர்னியே வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘மோர்னியே..’ எனத் தலைப்பிடப்பட்ட இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை காஞ்சனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம், கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டு கட்டு கிழியும் கூத்து கட்டு பறைய ஏத்துக்கட்டு…’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பின்னனி பாடகர் எஸ். பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இளைய தலைமுறையினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் துள்ளலிசை பாடலாக இருப்பதால் இந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் லைக்காவின் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. https://youtu.be/z4l6jWDD0JY