திரை விமர்சனம்

கமலா திரையரங்கில் நாளை முதல் ரஜினியின் ‘மூன்று முகம்’

டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் ‘மூன்று முகம்’ படத்தினை கமலா சினிமாஸ் ரீ-ரிலீஸ் செய்கிறது.

இதுகுறித்து சென்னை வடபழனி கமலா சினிமாஸ் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறும்போது, ​​“எங்கள் திரையரங்குகளில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களை பல வருடங்களாக ஒவ்வொரு பார்வையாளர்களும் இதயப்பூர்வமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அவரது பிரம்மாண்டமான திரைப்படமான ‘மூன்று முகம்’ டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும், ரஜினிகாந்த் சாரின் வசீகரத்திற்காகவும், சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் மற்றும் ஸ்டைலுக்காகவும் தற்போதைய தலைமுறை இளைஞர்கள் கூட கொண்டாடுகிறார்கள்.
அவரது ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 அன்று திரையரங்குகளில் வெளிவர இருக்கும் இந்த சூழலில், இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதன் மூலம் ரஜினிகாந்த் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு கொண்டாட்டத்தைக் கொடுக்க விரும்பினோம். இந்த வெளியீட்டை எளிதாக்கிய சத்யா மூவிஸ் தங்கராஜ் அவர்களுக்கு கமலா சினிமாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.