ஷாருக்கானுடன் கொண்டாடுங்கள் , வெளிவந்தது ஜவான் படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”
இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் “வந்த எடம்” பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது.
கொண்டாட்டமிக்க ‘வந்த எடம்’ பாடல், அனிருத்தின் இசையில் உயிரை அதிரச் செய்யும் ஒலியோசையில், அனைவரையும் உற்சாக ஆட்டமாட வைக்கிறது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார், அவரது நடன அமைப்பு பார்வையாளர்களைத் துள்ளல் நடனம் போட வைக்கிறது.
பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகளின் வரிசையில் ‘வந்த இடம்’, பாடலும் ஜொலிக்கிறது. ‘ஜவான்’ பட முழு ஆல்பத்திற்கும் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடலை தன் குரலில் பாடியுள்ளார் அனிருத். படத்தின் துடிதுடிப்பை, துள்ளலை, உணர்வாக வெளிப்படுத்தும் இந்த டான்ஸ் நம்பர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு விருந்தாக அமைந்துள்ளது.
வாத்தி கம்மிங், அரபி குத்து போன்ற சமீப காலங்களில் மிகப்பெரிய ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த அனிருத் “வந்த எடம்” பாடல் குறித்துக் கூறுகையில்..
ஜவானின் “வந்த எடம்’’ பாடல் இப்படத்தில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். இந்தப்படத்திற்காக நான் இசையமைத்த முதல் பாடல் இது. மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு நான் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும், அவர் எங்கள் தலைமுறையின் சின்னமாக விளங்குபவர் அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கு நியாயம் செய்ய வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன். இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தது, இந்த பாடலை இவ்வளவு பெரிய அளவில் மிகப்பெரிய விஷுவல் விருந்தாக மாற்றியதில், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகப்பெரிது. இது ஒரு சவாலான மற்றும் ஆக்கப்பூர்வமான, நிறைவான பயணம், மூன்று மொழிகளில் இந்தப் படத்திற்கான ஆல்பத்தை உருவாக்கியது சிறந்த அனுபவம். ‘ஜவான்’ படத்தின் இசையை நான் ரசித்த அளவுக்கு மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”
ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வந்த எடம்’ பாடலின் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் நடந்துள்ளது, நடிகர் ஷாருக்கானின் ஈடு இணையற்ற நடன ஆற்றல் மற்றும் 1000க்கும் மேற்பட்ட திறமையான பெண் நடனக் கலைஞர்களும் இணைந்து இந்த பாடல் பிரமாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்ததாக உருவாகியுள்ளது . முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் அனிருத்தின் துள்ளல் இசையுடன் இணைந்து அனைவரும் ரசிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது,
இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாகியுள்ளது , குறிப்பாக இந்தப் பாடல் தமிழில் ” வந்த எடம் ” என்றும், ஹிந்தியில் ” ஜிந்தா பந்தா” என்றும் மற்றும் தெலுங்கில் ” தும்மே துலிபெளா ” என்றும் வெளியாகியுள்ளது, ஜவான் படத்தின் இந்த ரசனை மிகுந்த பாடலை கேட்கும் அனுபவத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.