டியர் டெத் பட விமர்சனம்
மனிதர்களுக்கு மரணம் என்றால் என்ன? என்பதை விளக்குவது தான் இந்த ‘டியர் டெத்’.
படத்தில் நான்கு கதைகள். நான்கிலுமே வெவ்வேறான மரணங்கள். அந்த மரணங்கள் மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை.
நான்கு கதைகளிலும் நடித்திருக்கும் நடிகர்கள் பொருத்தமான தேர்வு என்பது கதைக்குள் நம்மை கூடுதலாக ஈர்த்துக் கொண்டு விடுகிறது.
மரணம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், மரணம் பற்றி மனிதர்களுக்கு பாடம் எடுக்கிறார். எடுக்கிறார். எடுத்துக் கொண்டே இருக்கிறார்.
வயதான அம்மாவை அன்புடன் பார்த்துக் கொள்ளும் வெங்கடேசன், புதுமணத் தம்பதிகள் ஸ்முருதி, ஜெய்,
நடிகராக அறிமுகமான பாடலாசிரியர் முத்தமிழ், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஜூவி ஆர்த்தி, சிறுமி சாய் ஜீவிதா கேரக்டர்களில் வாழ்ந்து சிறப்பு சேர்க்கிறார்கள்.
ஜாலியான நான்கு நண்பர்களின் வாழ்க்கையை சொல்லும் கதையில் நண்பர்களாக சதிஷ் நாகராஜன், மணி போஸ், ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் படததின் கலகலப்பு பக்கம். கலகலப்பிலும் சோகமாக நண்பர் ஒருவரின் எதிர்பாராத இறப்பு கண்களை குளமாக்கி விடுகிறது..
அசோக் சுவாமிநாதனின் ஒளிப்பதிவு நெஞ்சல் பதிந்த ஓவியம். ஒளி ஓவியம்.
கதை வசனம் எழுதியிருக்கும் ஸ்ரீதர் வெங்கடேஷன், மரணம் பற்றி நமக்கு புரிய வைப்பதற்காக இந்த கதையை எழுதியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் நான்கு கதைகளில் வரும் மரணங்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கலாம்.
படத்தை இயக்கியிருக்கும் பிரேம் குமார் புதிய கதைக்கருவை எடுத்துக்கொண்ட விதத்தில் கவனம் ஈர்க்கிறார்.